உதகை பொன்னழகன்
தமிழக எழுத்தாளர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உதகை பொன்னழகன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் கவிஞர். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், நாகணம்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கலைஞர் கே. அங்கப்பா, சின்னம்மாள். நீலகிரி மாவட்டம், அருவங்காடு எனும் ஊரில் வசித்து வரும் இவருடைய படைப்புகள் தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் வெளியாகியிருக்கின்றன. இவர் இரண்டு மேடை நாடகங்களை எழுதி அவை மேடைகளில் அரங்கேற்றம் பெற்றுள்ளன. இவர் எழுதிய அறுபதுக்கும் அதிகமான வானொலி நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
உதகை பொன்னழகன் | |
---|---|
பிறப்பு | பொன்னையன் நாகணம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
இருப்பிடம் | அருவங்காடு, நீலகிரி மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | உதகை பொன்னழகன் |
அறியப்படுவது | எழுத்தாளர், கவிஞர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | கலைஞர் கே. அங்கப்பா (தந்தை), சின்னம்மாள் (தாய்) |
வாழ்க்கைத் துணை | அமராவதி |
பிள்ளைகள் | தென்னரசி (மகள்), மங்கையர்க்கரசி (மகள்) |
உறவினர்கள் | சகோதரர்கள் -1, சகோதரி -2 |
விருதுகள் | கவிமாமணி |
எழுதியுள்ள நூல்கள்
தொகு- வளம்மிக்க நீலகிரி (பயண நூல்), சேகர் பதிப்பகம், சென்னை. (1965)
- அன்பின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு), அசோகன் பதிப்பகம், சென்னை. (1968)
- ஆடி வரும் காவேரி (ஆற்றின் வரலாறு), (1969)
- கொடைக்கானல் (மலை வரலாறு), (1969)
- பாடும் பறவைகள் (பறவை இயல்), நன்செய் பதிப்பகம், சென்னை. (1970)
- ஒரே நிலா (நாவல்) (1973)
- தமிழகத்து ஆறுகள் (ஆறுகள் வரலாறு) (1973)
- உதிர்ந்த போது (சிறுகாவியம்) (1985)
- நீர் மலர்கள் (கவிதைத் தொகுப்பு) (1985)
- பெண்பாக் களஞ்சியம் (இலக்கியம்), மங்கை நூலகம், நீலகிரி. (1986)
- அழகிய வெண்பா அறுநூறு (இலக்கியம்), மங்கை நூலகம், நீலகிரி. (1990)
நாடகங்கள்
தொகு- இவர் எழுதிய அங்கையர்கன்னி, கம்பர் மகள் எனும் இரண்டு மேடை நாடகங்கள் மேடைகளில் அரங்கேற்றம் பெற்றுள்ளன.
- இவர் எழுதிய 60க்கும் அதிகமான வானொலி நாடகங்கள் சென்னை, கிறித்துவக் கலை தொடர்பு நிலையம் தயாரித்து, எத்தியோப்பியாவிலிருந்து உலகம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இவற்றில் காணிக்கை, வாங்கிக் கொடுத்த கை, நகை ஆகிய மூன்று நாடகங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
பொறுப்புகள்
தொகுஇவர் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பெறுப்பேற்று செயல்பட்டிருக்கிறார்.
- எழுத்துலகம், நீலகிரி மாவட்டச் செயலாளர் (1973)
- தமிழ்க் கவிஞர் மன்றம், நீலகிரி மாவட்டச் செயலாளர் (1974)
- தமிழ் எழுத்தாளர் முன்னேற்றக் கழகம், நீலகிரி மாவட்டச் செயலாளர் (1975)
- தமிழ்நாடு எழுத்தாளர் முன்னேற்றக் கழகம்,(பெயர் மாற்றத்திற்குப் பின்பு) மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்.
- திருக்குறள் அறநெறிமன்றச் செயலாளர், குன்னூர் (1975)
- இலக்கிய அணி, நீலகிரி மாவட்டத் தலைவர் (1977)
- தி.மு.க. இலக்கிய அணி, நீலகிரி மாவட்டச் செயலாளர் (1981)
- தமிழ் எழுத்தாளர் பேரவை, மாநிலப் பொதுச்செயலாளர் (1987)
பாராட்டு மற்றும் பரிசுகள்
தொகு- உதகை முத்தமிழ்க் கவிஞர் மன்றம் ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்புடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தது.(1985)
- தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி கவிமாமணி பட்டம் வழங்கிச் சிறப்பு (1990)
ஆதாரம்
தொகு- உதகை பொன்னழகன் வாழ்வும் - பணியும் நூல் (தொகுப்பு: வேத. இளங்கோ, ஈரோடு, வெளியீடு: கவிஞர் பழ. செல்வன், திருச்சி)