உதடு மற்றும் அண்ணப் பிளவை

ஒரு பிறவிக் குறைபாடு

உதடு மற்றும் அண்ணப் பிளவை அல்லது கிரகணமூளி (Cleft lip and cleft palate) also known as orofacial cleft) என்பது பிறக்கும்போதே குழந்தைக்கு உதடு மற்றும் அண்ணம் ஆகிய இரண்டும் பிளவுபட்ட நிலையில் இருப்பது ஆகும்.[2] சூரிய கிரகணத்தைக் கர்ப்பிணிப் பெண்கள் பார்த்தால் இப்படிப்பட்ட குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கும் என்ற ஒரு நம்பிக்கையால் இந்தக் குறைக்கு கிரகணமூளி என்று பெயர் பெற்றது.[3] இந்தப் பிளவானது மேல் உதட்டின் இரு பக்களிலுமோ அல்லது நடுவிலோ இருக்கலாம். வாயின் மேலே உள்ள அண்ணத்தில் மூக்குவரை ஒரு பிளவையும் கொண்டிருக்கும். இந்த கோளாறால் உண்ணுதல், பேசுவதில் போன்றவற்றில் பிரச்சினை, செவித்திறன் பாதிப்பு, அடிக்கடி காதில் நோய்த்தொற்றுகள் போன்றவை ஏற்படலாம். [1]

உதடு மற்றும் அண்ணப் பிளவை
Cleft lip and palate
ஒத்தசொற்கள்மூயல் உதடு, கிரகணமூளி
உதடு மற்றும் அண்ணப் பிளவுடன் ஒரு குழந்தை.
சிறப்புகாது, மூக்கு, தொண்டை இயல், குழந்தை மருத்துவம்
அறிகுறிகள்மூக்குவரை அண்ணம் பிளவுபட்ட நிலை[1]
சிக்கல்கள்உண்ணுவதில் சிக்கல், பேசுவதில் சிக்கல், கேட்பதில் சிக்கல், காதில் நோய்த்தொற்று[1]
வழமையான தொடக்கம்பிறவிக் கோளாறு[1]
காரணங்கள்பொதுவாகத் தெரியவில்லை[1]
சூழிடர் காரணிகள்கருவுற்ற காலத்தில் புகைப்பிடித்தல். சற்கரை நோய், உடற் பருமன், வயதான காலத்தில் கற்பம் தரித்தல், சில மருந்துகளை உட்கொள்ளுதல்[1][2]
சிகிச்சைஅறுவைச் சிகிச்சை, பேச்சுப் பயிற்சி, பல் மருத்துவம்[1]
முன்கணிப்புநல்லவிதமாக சரிசெய்யப்படுகிறது[1]
நிகழும் வீதம்1000 பிறப்புகளுக்கு 1.5 குழந்தை (வளர்ந்த நாடுகள்)[2]

வயிற்றில் இருக்கும் குழந்தை வளரும்போது உதட்டில் இருக்கும் திசுக்கள் ஒழுங்காகச் சேராததின் விளைவே இதுவாகும். இது ஒரு பிறவிக் குறைபாடு ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இதற்கான காரணங்கள் தெரியவில்லை. என்றாலும் இதற்கான காரணங்களாக கருவுற்ற காலத்தில் புகைப்பிடித்தல். சற்கரை நோய், உடற் பருமன், வயதான காலத்தில் கற்பம் தரித்தல் மற்றும் சில மருந்துகளை உட்கொள்ளுதல் (சில வலிப்பு நோய் மருந்துகள் போன்றவை) கூறப்படுகின்றன. உதடு மற்றும் அண்ணப் பிளவானது கருவுவுற்ற காலத்தில் மேற்கொள்ளப்படும் கேளா ஓலியலை பரிசோதனையின் போது கண்டறியப்படுகிறது.

உதடு மற்றும் அண்ணப் பிளவானது அறுவைச் சிகிச்சையின் மூலம் சரிசெய்யப்படுகிறது. பிளவுபட்ட உதட்டுக்கான அறுவைச் சிகிச்சையானது பிறந்த சில மாதங்களிலும், பிளவுபட்ட அண்ணத்துக்கான அறுவைச் சிகிச்சையானது பிறந்த பதினெட்டு மாதங்களுக்கு முன் செய்யப்படுகிறது. பேச்சுப் பயிற்சியும் பல் மருத்துவமும் தேவைப்படலாம். இதனுடன் பொருத்தமான சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

வளர்ந்த நாடுகளில் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒன்று முதல் இரண்டு வரையிலான குழந்தைகள் உதடு மற்றும் அண்ணப் பிளவு குறைபாட்டுடன் பிறக்கின்றன. அண்ணப் பிளவு குறைபாட்டானது பொதுவாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இருமடங்கு ஆண் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. 2013 ஆம் ஆண்டில், இது உலகளாவிய அளவில் 3,300 இறப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் இது 1990 இல் ஏற்படுத்திய 7,600 இறப்புக்கள் என்ற எண்ணிக்கையில் இருந்து குறைந்த எண்ணிக்கை ஆகும்.[4] இந்தக் குறைபாடானது முன்பு ஆங்கிலத்தில் முயல் உதடு என்று முயலின் உதட்டை ஒப்பிட்டு ஹேர்-லிப் என அழைக்கப்படது, ஆனால் தற்போது இச்சொல் மனதைப் புண்படுத்தும் சொல்லாக கருதப்படுகிறது.[5] இந்நக் குறைபாடு மனிதர்களுக்கு மட்டுமல்லாது நாய்களுக்கும் உண்டாகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Facts about Cleft Lip and Cleft Palate". October 20, 2014. Archived from the original on 8 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  2. 2.0 2.1 2.2 Watkins, SE; Meyer, RE; Strauss, RP; Aylsworth, AS (April 2014). "Classification, epidemiology, and genetics of orofacial clefts.". Clinics in plastic surgery 41 (2): 149–63. doi:10.1016/j.cps.2013.12.003. பப்மெட்:24607185. 
  3. "கிரகணமூளி". பொருள் விளக்கம். விக்னசரி. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2018.
  4. GBD 2013 Mortality and Causes of Death, Collaborators (17 December 2014). "Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.". Lancet 385: 117–71. doi:10.1016/S0140-6736(14)61682-2. பப்மெட்:25530442. 
  5. Boklage, Charles E. (2010). How new humans are made cells and embryos, twins and chimeras, left and right, mind/selfsoul, sex, and schizophrenia. Singapore: World Scientific. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789812835147. Archived from the original on 2017-09-10.