உதயணகுமார காவியம்

உதயகுமார காவியம் தமிழில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.[1]

இது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7-ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல்.

  • இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு.

உதயணன் என்பவனின் கதையை இது கூறுகிறது.
கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான்.

நூல் பகுப்பு

தொகு

உதயணகுமார காவியம் உதயணனின் கதையைக் கூறுகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன.

  1. உஞ்சைக் காண்டம்
  2. இலாவாணக் காண்டம்
  3. மகத காண்டம்,
  4. வத்தவ காண்டம்
  5. நரவாகன காண்டம்
  6. துறவுக் காண்டம்.

இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல்.

பதிப்பு

தொகு

பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

கருவிநூல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. உண்மையில் இந்த நூலில் காப்பியப் பண்புகள் இல்லை என்பது மு. அருணாசலம் கருத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயணகுமார_காவியம்&oldid=3418874" இலிருந்து மீள்விக்கப்பட்டது