உதயணர்
உதயணர் (Udayana or Udyanacharya), கி. பி., 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலமான இந்திய இந்து தருக்கவாதி. இவர் வேத தத்துவ தர்சனங்களில், நியாயம் மற்றும் வைசேஷிகம் ஆகிய இரண்டு தர்சனங்களை ஒருங்கிணைத்து நியாய – வைசேடிகம் எனும் புது தர்சனத்தை உருவாக்கி, அதன் மூலம் பௌத்தர்களுக்கு எதிரான வாதப் போரில், இறைவனின் இருப்பை நிலைநாட்டியவர்.[1][2][3]
உதயணர் இந்தியாவின் பிகார் மாநிலத்தின் மிதிலை அருகே கரியன் என்ற கிராமத்தில் வாழ்ந்தவர்.
தத்துவம்
தொகுதருக்கத்தின் மூலம் மட்டுமே இறைவனின் இருப்பை அறிந்து கொள்ள இயலும் என்ற சித்தாந்தம் கொண்ட நியாயம் மற்றும் வைசேடிகம் ஆகிய இரண்டு தத்துவங்களின் ஒருங்கிணைத்து, இறைவனின் இருப்பை எளிதாக அறிந்து கொள்வதற்கு உதவியாக நியாய வைசேடிகம் என்ற புது சித்தாந்தத்தை உருவாக்கினார். இதற்காக நியாய குசுமாஞ்சலி என்ற தத்துவ நூலை இயற்றினார்.
பௌத்தர்களின் தாக்கம் அதிகமாக இருந்த காலத்தில், இறைவனின் இருப்பை அறிய காரண – காரியம் என்ற தத்துவத்தின் மூலம், ஒரு பானையை படைக்க எவ்வாறு களிமண்னும் குயவனும் வேண்டுமோ அவ்வாறே, இவ்வுலகம் படைக்கப்பட மெய்ப்பொருள் உறுதியாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய மெய்ப்பொருள் வாயால் விளக்க இயலாது என்று நிருபித்தவர்.
இறைவனின் இருப்பை நிருபித்தல்
தொகுஇறைவனின் இருப்பை மறுத்த பௌத்தர்களை, உதயணர் தன்னுடைய புதிய நியாய-வைசேடிகம் தத்துவத்தின் துணை கொண்டு மெய்ப்பொருளின் இருப்பை நிலைநாட்டி தருக்கப் போரில் வென்றார். இந்தியாவிலிருந்து பௌத்த தருக்கவாதிகளை விரட்டியடித்தன் மூலம், ஒன்பது நூற்றாண்டுகளாக முடிவில்லாமல் நடந்தவந்த இந்து – பௌத்த சமய தர்க்கப் போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.
படைத்த தத்துவ நூல்கள்
தொகு- நியாய குசுமாஞ்சலி
- ஆத்ம தத்துவ விவேகம்
- கிரணாவளி
- நியாய பரிசிஷ்டா எனப்படும் ஞான சித்தி அல்லது ஞான சுத்தி
மேற்கோள்கள்
தொகு- ↑ Dalal, Roshen (2014), Hinduism: An Alphabetical Guide, UK: Penguin
- ↑ Dasgupta, Surendranath (1975). A History of Indian Philosophy (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. ISBN 978-81-208-0412-8.
- ↑ Matilal, Bimal Krishna; Ganeri, Jonardon; Tiwari, Heeraman (1998-01-01). The Character of Logic in India (in ஆங்கிலம்). SUNY Press. ISBN 978-0-7914-3739-1.