வேத தத்துவ தரிசனங்கள்

வேத தத்துவ தரிசனங்கள் எனப்படுபவை வேதங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நோக்குகள் ஆகும். விடயங்களை நோக்கும் வழிகள் எனப் பொருள்படும் தரிசனங்கள் ஆறு வகைகளாக உள்ளன. இவற்றை, உண்மைப் பொருள் பற்றிய ஆறு விதமான விளக்கங்கள் எனக் கூறலாம். இவை ஒவ்வொன்றும், பல்வேறு காலப்பகுதிகளிலும் எழுதப்பட்ட வேதப் பகுதிகளில் சிதறிக்கிடக்கும் கருத்துக்களை, தங்களுக்கேயுரிய முறைகளில் ஒழுங்கு படுத்தியும், ஒருமுகப்படுத்தியும் தருகின்றன. இந்த ஒவ்வொரு பிரிவையும் நிறுவியவர்களாக அறியப்படும் ரிஷிகள், இவற்றுக்குரிய "சூத்திர நூல்களையும்" இயற்றியுள்ளார்கள். இவைகளை ஆத்திக அலலது வைதிக தர்சனங்கள் என்பர்.

ஆறு ஆத்திக அல்லது வைதிக தரிசனங்கள் (Vedic Systems or Homogeneous Systems)

தொகு

ஆறு வேத தரிசனங்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு:

  1. நியாயம் - கௌதமர்
  2. வைசேடிகம் - கணாதர்
  3. சாங்கியம் - கபிலர்
  4. யோகம் - பதஞ்சலி
  5. மீமாம்சை (பூர்வ மீமாம்சை) - ஜைமினி
  6. வேதாந்தம் (உத்தர மீமாம்சை) - பாதராயணர்

இவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கருத்திற்கொண்டு இந்த ஆறு தரிசனங்களும், இரண்டிரண்டாகச் சேர்த்து மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

  1. நியாயம் - வைசேடிகம்
  2. சாங்கியம் - யோகம்
  3. மீமாம்சை - வேதாந்தம்

நான்கு நாத்திக அல்லது அவைதிக தர்சனங்கள் (Non-Vedic or Heterogeneous System)

தொகு

நான்கு நாத்திக அல்லது அவைதிக தரிசனங்களும் அவற்றை நிறுவியவர்களும் பின்வருமாறு:

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேத_தத்துவ_தரிசனங்கள்&oldid=2454304" இலிருந்து மீள்விக்கப்பட்டது