உதிதா துகான்
உதிதா துகான் (Udita Duhan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைதடிப் பந்தாட்ட வீராங்கனையாவார். 1998 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியப் பெண்கள் வளைதடிப் பந்தாட்ட அணியின் உறுப்பினராக இருந்தார். அரியானாவைச் சேர்ந்த இவர் இந்திய அணியின் தடுப்பாட்டக்காரராக விளையாடினார்.[1] [2]
2022 ஆம் ஆண்டில் உதிதா துகான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனித் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 14 சனவரி 1998 இசார், அரியானா, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.58 மீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
எடை | 54 kg (119 lb) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | நடுக்களம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
Club information | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தற்போதைய சங்கம் | இந்திய எண்ணெய் நிறுவனம். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூத்தவர் காலம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
வளைதடிப் பந்தாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்திய எண்ணெய் நிறுவனம். | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | இந்திய மகளிர் 21-வயதுக்குட்பட்டோர் அணி | 4 | (0) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
2017– | இந்தியப் பெண்கள் தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி. | 108 | (11) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
|
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅரியானா மாநிலம் இசார் மாவட்டத்தில் உள்ள பிவானியின் நங்கல் கிராமத்தில் உதிதா பிறந்தார். இவரது தந்தை, இயசுபீர் சிங், ஒரு காவல்துறை அதிகாரியும் ஒரு கைப்பந்து வீரருமாவார். எறிபந்து விளையாடத் தொடங்கிய இவர் பின்னர் வளைதடிப் பந்தாட்டத்திற்கு மாறினார். 2015 ஆம் ஆண்டு தந்தை இறந்த பிறகு, தாயார் கீதா தேவி இவரை வளைதடிப்பந்தாட்ட விளையாட்டை தொடர ஊக்குவித்தார். உதிதா விளையாட்டு ஆணைய விடுதியில் சேர்ந்தார். [3] [4]
தொழில்
தொகு2018: இயாகர்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி, .
2018: தோங்கேயில் நடந்த ஆசிய வெற்றியாளர் போட்டியில் வெள்ளி.
2018: 2018 மகளிர் வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பையில் பங்கேற்றார். [5]
2021: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடினார்.
2022: மசுகட்டு ஆசிய கோப்பையில் வெண்கலம், .
2022: பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் இடம்பெற்றார். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "HockeyIndia profile". Archived from the original on 2018-09-24. பார்க்கப்பட்ட நாள் 2024-02-22.
- ↑ "Asian Games profile". Archived from the original on 2018-08-23. பார்க்கப்பட்ட நாள் 2024-02-22.
- ↑ SportsCrazy (2022-07-28). "Udita Duhan Biography: Achievements, Personal Life, Family, Unknown Facts & Social Media". www.sportscraazy.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-20.
- ↑ Deswal, Deepender (2023-08-03). "'Hockey player Udita Duhan has fulfilled her late dad's dream'". www.tribuneindia.com. Archived from the original on 2023-11-06. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
- ↑ "Hockey Women's World Cup 2018: Team Details India". FIH. p. 7.
- ↑ Judge, Shahid (2023-05-09). "Hockey: Udita Duhan puts aside regret to embark on flourishing hockey career". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-20.