உத்தபுரம்
உத்தபுரம் (Uthapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது இருபது ஆண்டுகளாக, கிராமத்திலிருந்த தலித்துகளைப் பிரித்த சுவரால் அறியப்பட்டது. [1]
புவியியல் மற்றும் புள்ளிவிவரங்கள்
தொகுமதுரை மாவட்டத்தில் பேரையூர் வட்டத்தில் உத்தபுரம் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகர் மதுரையிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வூரின் மக்கள்தொகையை 5149 ஆகும். இதில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 2172 ஆகும்.[2][3]. இது உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது.[4]
உத்தபுரம் சுவர்
தொகுஇந்த கிராமத்தில் இரண்டு பெரிய சமூகங்கள் உள்ளன, ஒன்று ஆதிக்க சாதி இந்து வேளாளர் , மற்றொன்று பட்டியலின சாதியான பள்ளர் சமூகம் ஆகும்.[5] இந்த சமூகங்களிடையே சாதி வன்முறை அவ்வப்போது நிகழ்ந்தது. வன்முறை 1948, 1964 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் நடந்தது. 1989 வன்முறைக்குப் பிறகு, ஆதிக்க சாதி கிராமத்திலிருந்த தலித்துகளைப் பிரிக்க 30 மீட்டர் நீள சுவரைக் கட்டினர். சுவர் பின்னர் "தீண்டாமையின் சுவர்" என்று விவரிக்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் தெருக்களில் தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை.[6] இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தலித் அமைப்புகளின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) சுவர் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.[5][7] சாதி இந்துக்கள் சுவர் தனியார் நிலத்தில் கட்டப்பட்டதாக வாதிட்டனர். [8] மே 2008 இல், மதுரை மாவட்ட நிர்வாகம் சுவரை இடித்து தலித்துகளை கிராமத்திற்குள் அனுமதித்தது. இடிக்கப்பட்ட பின்னர், சமூகங்களிடையே வன்முறை ஏற்பட்டது. ஆதிக்க சாதியினர், கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என்று மிரட்டினர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2012 ஆம் ஆண்டில், வன்முறையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.[9][10][11]
சமூகங்களுக்கு இடையிலான சமாதான உடன்படிக்கையை மாவட்ட நிர்வாகம் துவக்கியது. எனவே, 1989 முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் முத்தாலம்மன்-மாரியம்மன் கோவிலுக்குள் தலித்துகள் அனுமதிக்கப்பட்டனர்.[12][10][13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The walls still keeping untouchables out". BBC News. 19 May 2008. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7404062.stm. பார்த்த நாள்: 1 August 2015.
- ↑ "census 2011".
- ↑ "census India".
- ↑ "Usilampatti needs transformation". The Hindu.
- ↑ 5.0 5.1 "Accord in Uthapuram". Front line.
- ↑ "Electrified wall divides people on caste lines". The Hindu.
- ↑ "The fall of a wall".
- ↑ "'Caste wall' is partly demolished".
- ↑ ""Uthapuram wall is no Berlin wall"". The Hindu.
- ↑ 10.0 10.1 "Wall vs will". Front line.
- ↑ "G.O. issued for paying Rs.1.14 crore as compensation to Uthapuram Dalits". The Hindu.
- ↑ ""Uthapuram wall is no Berlin wall"". The Hindu.
- ↑ "G.O. issued for paying Rs.1.14 crore as compensation to Uthapuram Dalits". The Hindu.