உத்தரிப்பு மறுப்பு நீதிமுறைகள்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
உத்தரிப்பு மறுப்பு நீதிமுறைகள்
உத்தரிப்பு என்ன?
தொகுஉத்தரிப்புகள் பல உருவங்களில் பல மக்களை பீடிக்கிறது. இவை முக்கியமாக இன உத்தரிப்பு, நிற உத்தரிப்பு, பால் உத்தரிப்பு, மத உத்தரிப்பு, ஜாதி உத்தரிப்பு, மொழி உத்தரிப்பு, வயது உத்தரிப்பு ஆகும். இப்படிப்பட்ட உத்தரிப்புகள் மனித உரிமைகளை மீறுபவையாகி , சமுதாயத்தில் மனக் கசப்பையும், காழ்ப்பையும் ஏற்படுத்தி, சமுதாய சமரசத்தை குறைத்து, தொழில், வேலை இடங்களில் மனிதர்களின் ஊக்குசக்தியை பாதிக்கிறது. அத்னால் பல நாடுகளின் அரசியல் சாசனங்களில் உத்தரிப்பு மறுப்பு மசோதாக்கள் உள்ளன. இந்த மசோதாக்களை அமல் செய்ய அரசாங்களும், தொழில், வேலை நிருவனங்களும் உத்தரிப்பு நீக்கல் நிர்வாகசபைகளை ஆக்கி உதாரிப்பினால் பீடித்தவர்கள் குறை சொல்ல சந்தர்ப்பம் கொடுத்து, அதனை நீக்க முயற்கிக்கிறன.
உ.ம.நீ. பல நாடுகளில் சமவாய்ப்பு நீதிமுறைகளோடு இணையப்பட்டு, பேசப் படுகிறன. முக்கிய வித்தியாசம் என்னவென்றால் சமவாய்ப்பு நீதிகள் தொழில், வேலை இடங்களில் சுலபமாக அமல் படுத்த முடியும். உ.ம.நீ. சமுதாயத்தின் எல்லா தளங்களிலும் செல்லுபடியாகும். உ.ம.நீ மனித உரிமை கொள்கையோடு ஒத்துப் போகிறது.
உத்தரிப்புகளின் வகைகள்.
தொகு1.நேர்முக உத்தரிப்பு - நபர்களை மத, இன, பால், மற்ற காரணங்களினால் பழித்தல், வாய்ப்பு மறுத்தல்
2.சுற்றுவழி உத்தரிப்பு - சில இன, மத ஆட்களை உத்தரிப்புதைப்போல் கட்டளைகளையும், முறைகளையும் நிறைவேற்றுதல்
3. மற்ற நபர்களின் கண்ணியத்தையும், தன் மானத்தையும் குலைக்கும் வகையில் திட்டுதல், பயமுறுத்துதல், உதாசீனப் படுத்துதல், குறைபடுத்துதல், கடுஞ்சொற்கள், உறண்டையாடுதல் முதலியவை.
4.பலியேற்றுதல்- நபர்களை தண்டித்தல் - உதாரணமாக அவர் உத்தரிப்பு எதிர்த்து குறை சொன்னது காரணமாக, அவரை மற்றி வழிகளில் தண்டித்தல்
உத்தரிப்பு காரணங்கள்:
தொகுபல நாடுகள் கீழ்க் கண்ட உத்தரிப்புகளை அடையாளம் கண்டு, அதற்கு தக்கவாறு நவவடிக்கை எடுக்கிறன.
இனம், நிரம் மற்றும் உருவம், மதம், பால், பால் விருப்பம், மொழி, தேசீயம், உறுப்புசேதம், வயது, தாய்மொழி, ஜாதி
பல நாடுதளில் உத்தரிப்பு மறுப்பு நீதிமுறைகள்
தொகுஐக்கிய நாடுகள் 1965ல், "எல்லாவித இன உதாரிப்புகளை அகற்றும் மகாநாடு" கூட்டி, அதற்கேற்ப தீர்மானங்களை ஏற்றியது. அத்தீர்மானங்களை இதுவரை 179 நாடுகள் அங்கீகரித்து உள்ளன.
இந்தியா:
தொகுசட்ட சாசனத்தின் பகுதி 3 , குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுத்து, உத்தரிப்பை தெளிவாக மறுக்கிறது.
"இன, மத, ஜாதி, பிறக்குமிடம் காரணகளால் ஏற்படக்கூடிய உத்தரிப்பின் தடை.
அ. நாடு எந்த பிரஜை மேலும் மத, இன, ஜாதி, பால் ரீதியில் உத்தரிப்பு கட்டாது.
ஆ.எந்த பிரஜையும் மத, இன, ஜாதி, பால், பிறப்பிடம் காரணமாக 1.கடைகள், உணவுவிடுதிகள், பொதுக்கேளிப்பு இடங்களின் பிரவேசத்தையும்
2. குளம், ஏரி, கிணறுகள், சாலைகள், பொது மக்கள் சௌகரியங்கள், மற்றும் எந்த முழுதாகவே, ஓரளவோ பொதுஜன நிதியிலிருந்து பராமரிக்கப்படும் இடங்களின் போகத்தையும்.
ஒருகாலும் முடக்கவோ, இழக்கவோ ஆளாகமாட்டார்.
பிரித்தன்
தொகுஉதாரணமாக சமீபத்தில் வயது உத்தரிப்பை தடை செய்யும் சட்டங்கள் அமலாகி உள்ளன. வயதின் சாக்காக நிறைய ஆற்றல் வாய்ந்த 40, 50 மேலானவர்களை தொழில் நிருவனங்கள் உதாரிப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. அதனால் தனி நபர்களுக்கும், தொழிலுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் நஷ்டம் ஏற்படுவதால், பிரித்தானிய அரசாங்கம் 1ம் அக்டோபர் 2006ல், அதைத் தடுக்கும் சட்டத்தை அமலாக்கியது.
பிரித்தனில் உறுப்புசேதமடைந்தவர்களை வேலை, கல்வி, போக்குவரத்து, வீடு சம்பந்தமான விஷயங்களில் உத்தரிப்பை தடை செய்ய 2005ல் "உருப்புகேடு உத்தரிப்பு சட்டம் 2005" என இயற்றியது.
அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜியம்
தொகுஒருபால்சார்வோர் வேலையிலும் வீட்டு வசதிகளில் அடையும் உத்தரிப்பை மறுக்க அமெரிக்கவில் 17 மாநிலங்கள் சட்டங்கள் கொண்டு வந்துள்ளன.
1967லேயே வயது காரணமாக உத்தரிப்பை தடை செய்து சட்டமாகியுள்ளது
வெளி இணைப்புக்கள்
தொகு- இந்திய அரசியல்சாசனம்
- பிரித்தானிய அரசின் பக்கம்்[தொடர்பிழந்த இணைப்பு]
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைபக்கம்
- பிரித்தன் வயது உத்தரிப்பு ஆய்வு
- அ.ஐ.ரா.த்தின் வயது உத்தரிப்பு மறுப்பு சட்டம்
- கலிபோர்னியாவின் சர்வ உத்தரிப்பு தடை சட்டம்
- ஐ.நா.வின் எல்லாவித இன உத்தரிப்புகளை அகற்றும் மகாநாடு தீர்மானம் பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம்