உத்தரநல்லூர் நங்கை

(உத்திரநல்லூர் நங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உத்தரநல்லூர் நங்கை என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண்பாற் புலவர். பாய்ச்சலூர்ப் பதிகம் என்ற நூலை இயற்றியவர். இந்நூலில் சாதி அமைப்பையும் பாகுபாட்டினையும் கடுமையாகச் சாடியுள்ளார். இவரைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. இப்புலவர் திருச்சி மாவட்டம் திருப்பாச்சில் ஆசிரமம் என்னும் ஊரை அடுத்த உத்தரநல்லூர் என்னும் ஊரில் நந்தனார் குலத்தில் பிறந்தவர்.

அபிதான சிந்தாமணி [1] இவரைப் பற்றி “இவள் ஒரு பெண்கவி, பிராமணரை வசை பாடினாள்” என்று குறிப்பிடுகிறது. தமிழ் நாவலர் சரிதை [2] இவரை ”உத்தர நல்லூர் நங்கை இன்னாள் என்றும் இவளுக்கு பிராமணரிடத்து வெறுப்பு வந்ததற்கு காரணம் இன்னதென்றும் விளங்கவில்லை” என்கிறது. நங்கை குறித்து மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாற்றில் பின்வரும் நிகழ்வு தரப்பட்டுள்ளது:[3]

இந்த நங்கை இளம்வயதில் ஆற்றங்கரையில் மாடு மேய்த்து வந்தாள். வேதியச் சிறுவன் ஒருவன் அந்த ஆற்றில் நீராடி மந்திரம் சொல்லி, சந்தி முதலியன செய்வதைப் பலநாள் வேடிக்கை பார்த்து வந்தாள். வேதியச் சிறுவன் அவளோடு கள்ளம் கபடமின்றிப் பழகினான். வேதங்களைக் கற்றுத் தந்தான். ஊர் வேதியர் அவளைக் கண்டித்தனர். வேதியச் சிறுவன் நங்கைக்காக வாதாடினான். வேதியர் தம் சிறுவனுக்காக விட்டுக் கொடுத்தனர். நங்கை சிறுவனிடம் கற்ற கல்வியின் பயன் இந்த நூல்.

அடிக்குறிப்பு

தொகு
  1. 1910 இல் வெளியான நூல்
  2. பதினேழாம் நூற்றாண்டில் திரட்டப்பட்டு 1916 இல் பதிப்பிக்கப்பட்டது
  3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரநல்லூர்_நங்கை&oldid=3730940" இலிருந்து மீள்விக்கப்பட்டது