உத்தேச புற்றுநோய் தோன்றும் வீதம்

உத்தேச புற்றுநோய் தோன்றும் வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும் அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு (crude cancer incidence rate) கணக்கிடப்படுகிறது.[1]

உத்தேச புற்றுநோய் தோன்றும் வீதம் =

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை
---------------------------------------------------------X 100000
மொத்த மக்கள் தொகை

ஓர் ஆண்டின் நடுவில் ஒரே இடத்தில் வாழும் 100,000 லட்சம் பேரில் எத்தனைப் பேருக்கு அக்குறிப்பிட்ட வருடத்தில் இந்நோய் தோன்றுகிறது எனக் கணக்கிடுவதற்காக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைக்கும் ஈவுத்தொகை (மேலே உள்ள சமன்பாட்டிலிருந்து பெறப்பட்டது) 100,000 என்ற எண்ணால் பெருக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டிற்காக:

சென்னையின் மக்கள் தொகை 75,00000 (75 லட்சம்) என்றும் (ஆண்டு நடுவில்) இவர்களில் 5745 புதிய புற்று நோயாளிகள் பதிவாகினர் என்றும் கொண்டால் உத்தேச புற்றுநோய் வீதம் (உ.பு.தோ.வீ ):

அதாவது லட்சம் பேரில் 77.5 பேருக்குப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

இதுபோல் ஆண், பெண் என்றும் வயது வாரியாகவும் கணக்கிடலாம்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு