உத்தேஜ்

இந்திய நடிகர்

உத்தேஜ் (Uttej) ஓர் இந்திய நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். சந்தமாமா (2007) திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருதை வென்றார்.[1]

உத்தேஜ்
பிறப்புநல்கொண்டா மாவட்டம், தெலங்காணா, இந்தியா
பணி
  • Actor
  • screenwriter
வாழ்க்கைத்
துணை
பத்மாவதி (இற. 2021)

சொந்த வாழ்க்கை

தொகு

உத்தேஜ், நல்கொண்டா மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தார். [2] இவர் பிரபல பாடலாசிரியர் சுத்தலா அசோக் தேஜாவின் மருமகன் ஆவார்.[3] புற்றுநோயால் 2021 செப்டம்பரில் இறந்த பத்மாவதியை உத்தேஜ் மணந்தார். [4]

தொழில்

தொகு

உத்தேஜ், 1989 இல் ராம் கோபால் வர்மா இயக்கிய சிவா என்ற படத்தில் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இப்படத்தில் உணவு விடுதியில் பணிபுரிபவராகவும் ஒரு வேடத்தில் நடித்திருந்தார். [5] சிவா படத்தில் வில்லனாக நடிக்க ஜே. டி. சக்ரவர்த்தியை பரிந்துரைத்தார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், குலாபி படத்திற்காக கிருஷ்ண வம்சியிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Nandi, special jury awards announced | Hyderabad News - Times of India" (in ஆங்கிலம்). TNN. Jan 13, 2009. பார்க்கப்பட்ட நாள் 2021-02-10.
  2. "V6 - Actor Uttej about his childhood" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-10.
  3. "Tollywood lyric writer Suddala Ashok Teja to undergo liver transplant" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-10.
  4. "Chiranjeevi, Rajasekhar, Prakash Raj and others pay condolences to actor Uttej after his wife's passing".
  5. Chandram (2019-08-17). "స్టార్ హీరోల వారసత్వంపై ఉత్తేజ్ కామెంట్స్" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தேஜ்&oldid=3825933" இலிருந்து மீள்விக்கப்பட்டது