சுத்தலா அசோக் தேஜா

திரைப்பட பாடலாசிரியர்

சுத்தலா அசோக் தேஜா (Suddala Ashok Teja) (பிறப்பு குர்ரம் அசோக் தேஜா ; 4 ஏப்ரல் 1954) ஓர் இந்தியக் கவிஞரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். மேலும், தெலுங்கு இலக்கியத்தில் பங்கு கொண்டுள்ளார்.[3] 2200க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார்.[4] தாகூர் (2004) என்ற படத்தில் இடம் பெற்ற "நேனு சைதம்" பாடலுக்காக சிறந்த பாடலுக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[5]

சுத்தலா அசோக் தேஜா
2010 இல் தேஜா
பிறப்புகுர்ரம் அசோக் தேஜா[1]
4 ஏப்ரல் 1954 (1954-04-04) (அகவை 70)
சுத்தலா கிராமம், ஐதராபாத் மாநிலம் (தற்போது தெலங்காணா), India[2]
பணி
  • கவிஞர்
  • பாடலாசிரியர்
வாழ்க்கைத்
துணை
நிர்மலா
விருதுகள்சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய திரைப்பட விருது

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சுத்தலா அசோக் தேஜா, தெலங்காணா மாநிலம், ஜன்கோன் மாவட்டத்திலுள்ள சுத்தலா கிராமத்தில் தெலுங்குக் கவிஞர் சுத்தலா அனுமந்து மற்றும் அவரது மனைவி ஜனகம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.[2] இவரது பெற்றோர் இருவரும் ஐதராபாத் நிசாமுக்கு எதிராக தெலங்காணா கிளர்ச்சியில் கலந்து கொண்டனர்.[1]

தொழில்

தொகு

அசோக் தேஜா தெலுங்குத் திரையுலகிற்கு வருவதற்கு முன்பு கரீம்நகர் மாவட்டத்திலுள்ள பந்தலிங்காபூர், மெடிபள்ளி மற்றும் மெட்பல்லி ஆகிய கிராமங்களில் அரசு ஆசிரியராக பணியாற்றினார். சிறுவயதிலிருந்தே பாடல் வரிகள் எழுதத் தொடங்கினார். தெலுங்குத் திரைப் படங்களில் நன்கு அறியப்பட்ட குணச்சித்திரக் கலைஞரான இவரது மருமகன் உத்தேஜ் இவருக்கு திரைப்படங்களில் முதல் வாய்ப்பினைப் பெற்றுத் தந்தார். 1996-1997 ஆண்டுகளில் ஓசே ராமுலம்மா மற்றும் நின்னே பெல்லதுதா ஆகிய படங்களுக்கு பாடல் வரிகளை எழுதிய பிறகு இவர் பிரபலமானார்.[6]

தாகூர் (2003) திரைப்படத்தில் நேனு சைதம் என்ற பாடலுக்காக 2003 ஆம் ஆண்டு சிறந்த பாடலுக்கான தேசிய திரைப்பட விருதை [7] . சிறீ சிறீ, அல்லூரி சீதாராம இராஜு மற்றும் வேடூரி ஆகியோருக்குப் பிறகு இந்த விருதை வென்ற மூன்றாவது எழுத்தாளர். இவர் 2017 வரை 1250 திரைப்படங்களுக்கு 2200 பாடல்களையும், 2500 தனிப்பட்ட பாடல்களையும் எழுதியுள்ளார். பிடா (2017) படத்தின் வச்சிந்தே பாடலுக்காக 2018 இல் சிறந்த பாடலாசிரியருக்கான (தெலுங்கு) தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை வென்றார்.

சொந்த வாழ்க்கை

தொகு

அசோக் தேஜா, நிர்மலா என்பவரை மணந்தார்.[8] இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "శ్రీశ్రీని ఆవాహన చేసుకున్నా!". Eenadu. 2018-04-26. Archived from the original on 26 April 2018. Retrieved 2021-03-04.
  2. 2.0 2.1 "Tollywood lyric writer Suddala Ashok Teja to undergo liver transplant". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Retrieved 2021-03-04.
  3. "60th Anniversary Of The Struggle Celebrated". Pd.cpim.org. 2006-07-23. Archived from the original on 2009-06-19. Retrieved 2016-12-01.
  4. "శ్రీశ్రీని ఆవాహన చేసుకున్నా!". 2018-04-26. Retrieved 2021-03-04.
  5. "Suddala Ashok Teja". Telugu Film Nagar. Retrieved 19 December 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Suddala Ashok Teja Interview by Telugu Cinema | సుద్దాల అశోక్ తేజ". Suddala.wordpress.com. 27 August 2004. Retrieved 2016-12-01.
  7. "The Hindu : National : Newcomer bags award for feature film". Hinduonnet.com. 2004-08-15. Archived from the original on 2010-05-22. Retrieved 2016-12-01.
  8. "Metro Plus Hyderabad / Personality : Aali neeku dandame". Archived from the original on 2005-11-22. Retrieved 2016-12-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தலா_அசோக்_தேஜா&oldid=4108848" இலிருந்து மீள்விக்கப்பட்டது