தெலுங்கு இலக்கியம்

தெலுங்கு இலக்கியம் அல்லது தெலுங்கு சாஹித்தியம் (Telugu literature) என்பது தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் ஆகும். இது கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் புராணங்களைக் கொண்டுள்ளது. தெலுங்கு இலக்கியம் 10 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (850-1000) ஜெயின் தெலுங்கு இலக்கியத்த்தில் இதைப் பற்றிய தகவல்கள் பிரபந்த ரத்னாவலி என்ற நூலில் இருப்பதைப் பற்றி பேச்சுவழக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.[1] தொடர்ந்து 11 ஆம் நூற்றாண்டு காலத்தில் நானைய்யா என்பவரால் மகாபாரதம் சமஸ்கிருதத்திலிருந்து தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இது விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் தழைத்திருந்தது, அங்கு தெலுங்கு மொழி பேரரசின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும்.

1500 முதல் 100 கிமு காலத்தில் திராவிட மொழியிலிருந்து தெலுங்கு மொழி பிரிந்திருக்கலாம். தமிழ் மொழியில் தோன்றிய இலக்கிய செயற்பாடுகள் பின்னர், தெலுங்கு மொழியில், பாரஜி, கோலமி, நாயகி மற்றும் கடாபா மொழிகள் ஆகியவற்றோடு வளர்ந்தது.[2]

ஆதாரங்கள் தொகு

ஆரம்பகால எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களுக்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இவற்றுள் இவர்களுடைய கவிதைகள் பற்றிய முன்னுரைகள் உள்ளன. இது, வழக்காமாக சமஸ்கிருத மொழியில் இருப்பதௌ போல எழுத்தாளர், புத்தகம் அர்ப்பணிக்கப்பட்ட அரசரின் வரலாறு, இந்த அரசர் வெளியிட்ட புத்தகங்களின் காலவரிசை பட்டியல் போன்றவைகள் உள்ளது. கூடுதலாக, கல்வெட்டுகளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. பல இலக்கண நூல்கள் மற்றும் புராணக் கதைகள் வழங்கும் விளக்கங்கள் ஆகியவை இவற்றில் உள்ளன. மேலும் கவிஞர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையின் மரபுகள் ஆகிய தகவல்களும் கிடைக்கின்றன.[3]

பொருள் தொகு

ஆரம்பகால தெலுங்கு இலக்கியம் பெரும்பாலும் சமயத்தை உள்ளடக்கியே இருந்தது. கவிஞர்களும் அறிஞர்களும் பெரும்பாலும் மொழி பெயர்ப்பினையே செய்து வந்துள்ளனர், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற அனைத்து புராணங்களையும் மொழிபெயர்த்துள்ளனர், இவை அனைத்தும் இந்திய கலாச்சாரத்தின் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன.[4]

பதினாறாம் நூற்றாண்டு முதல்,புராணங்களில் இருந்து அரிதாக அறியப்பட்ட கதைகள் தெலுங்கு மொழி காவியங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியது. பொதுவாக இலக்கியப் படைப்புகள் அகன்யா அல்லது கந்தா, சரித்ரா, விஜயா, விலாசா மற்றும் அபியுதாயா என்னும் தலைப்பின் கீழ் ஒரு ஒற்றை நாயகனை பற்றியும் அவனது பராக்கிரம்ங்களைப் பற்றியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தலைப்புகளில் பொதுவான விஷயங்கள் கவிதை வடிவிலேயே எழுதப்பட்டிருந்தன.[4]

பதினெட்டாம் நூற்றாண்டில், பரிணய, கல்யாண மற்றும் விவாஹா என்ற தலைப்பின் கீழ் கதாநாயகர்களின் திருமணங்களைப் பற்றி எழுதப்பட்டது.[4] சமய இலக்கியங்கள் மற்றும் மத நூல்களில் மதத்தின் நிறுவனர்களின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் அவர்களின் போதனைகளை உள்ளடக்கியிருந்தது.[4] பிரபந்தம், சம்பூ, காவியம், கவிதா[5] , சடகம், தசகா, அவதானம்[6] , நாடகம் மற்றும் நானேலு போன்ற பல்வேறு வடிவிலான இலக்கியங்கள் தெலுங்கில் காணப்படுகின்றன.[5]

குறிப்புகள் தொகு

  1. Prabhakara Sastry, Veturi (2014). Prabandha Ratnavali. Tirumala Tirupati Devasthanam. பக். 44 இம் மூலத்தில் இருந்து 2017-07-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170731025956/http://ebooks.tirumala.org/Home/Download/?ID=614. பார்த்த நாள்: 2019-03-24. 
  2. "ப்ரோதா திராவிடமிருந்து தெலுங்கு பிரிப்பு". Archived from the original on 2016-01-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
  3. Chenchiah, P.; Rao, Raja Bhujanga (1988). A History of Telugu Literature. Asian Educational Services. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0313-3. 
  4. 4.0 4.1 4.2 4.3 Chenchiah, P.; Rao, Raja Bhujanga (1988). A History of Telugu Literature. Asian Educational Services. பக். 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0313-3. 
  5. 5.0 5.1 Chenchiah, P.; Rao, Raja Bhujanga (1988). A History of Telugu Literature. Asian Educational Services. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0313-3. 
  6. Amaresh Datta, The Encyclopaedia of Indian Literature, v. 1, "Avadhanam" (Sahitya Akademi, 2006; ISBN 81-260-1803-8)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கு_இலக்கியம்&oldid=3732611" இலிருந்து மீள்விக்கப்பட்டது