உத்ராகண்டு அரசு சின்னம்

உத்ராகண்டு அரசு சின்னம் என்பது இந்திய மாநிலமான உத்ராகண்டு மாநில அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாகும்.[1] இந்த மாநிலம் 2000 நவம்பர் 9 அன்று பிதியதாக உருவாக்கப்பட்டதாகும்.

உத்ராகண்டு அரசு சின்னம்
Emblem of Uttarakhand
उत्तराखण्ड का राज्य-चिह्न
விவரங்கள்
பயன்படுத்துவோர்உத்தராகண்டு அரசு
உள்வாங்கப்பட்டது2000 நவம்பர் 9
முடிசாரனாத் சிங்கத் தலை சிவப்புப் பின்னணியில்
விருதுமுகம்வைர வடிவிலான வெள்ளை பின்னணியில் நீல எல்லைகளை உடைய கேடயத்தில், இடவலமாக நான்கு ஓடை போன்ற கோடுகள்.
ஆதரவுகுறிப்பால் காட்டும் இமயமலைச் சிகரங்கள்
குறிக்கோளுரை"सत्यमेव जयते" (சத்யமேவ ஜெயதே
Other elements"उत्तराखण्ड राज्य" (இந்தியில் உத்ராகண்டு மாநிலம்) என்ற நீல நிறத்தில் வரிகள் அடியில்
Useஉத்ராகண்டின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளில்

விளக்கம்

தொகு

உத்தரகண்ட மாநில சின்னமானது வைரவடிவில் நீல நிற ஓரங்களைக் கொண்டுள்ளது. ஒயிலான மலைச் சிகரங்கள் இமயமலையின் அழகிய மலைச் சிகரங்களைக் குறிப்பிடுகின்றன. நான்கு நீரோடைகள் இடமிருந்து வலமாக பாய்வதுபோல் கோடுகள் அமைந்துள்ளன. சின்னத்தின் உச்சியில் இந்திய தேசிய சின்னமான, சாரனாத் சிங்கத் தலை சிவப்புப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே தேவநாகரி எழுத்தில், "सत्यमेव जयते" சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. சின்னத்தின் கீழே இந்தியில் உத்திரகண்ட மாநிலத்தைக் குறிப்பிடும் வாசகம் "उत्तराखण्ड राज्य" என்று உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்ராகண்டு_அரசு_சின்னம்&oldid=2587112" இலிருந்து மீள்விக்கப்பட்டது