உபகுப்தர்
உபகுப்தர் (Upagupta) கிமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த பிக்கு ஆவார். சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட அசோகவதனம் எனும் வரலாற்று நூலிருந்து, உபகுப்தர், மௌரியப் பேரரசர் அசோகரின் ஆன்மீக குருவாக இருந்தார் என அறியப்படுகிறது.[1]:16
உபகுப்தரின் குருவான சனவாசி, புத்தரின் முதன்மைச் சீடராக விளங்கியவர்களில் ஒருவரான ஆனந்தரின் மாணவர் ஆவார்.
உபகுப்தர் துவக்க கால பௌத்தப் பிரிவுகளில் ஒன்றான நாகசேனர் நிறுவிய சர்வாஸ்திவாதப் பிரிவைச் சேர்ந்தவர்.
உபகுப்தர், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிக உயர்ந்த நிலையில் அறியப்பட்டுள்ளார். மியான்மரில் உபகுப்தரை, சின் உபகுப்தர் என்று அழைக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ John S. Strong (1989). The Legend of King Aśoka: A Study and Translation of the Aśokāvadāna. Motilal Banarsidass Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0616-0. பார்க்கப்பட்ட நாள் 30 October 2012.