உப்வான் ஏரி

இந்திய ஏரி

உப்வான் ஏரி (Upvan Lake) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தானே நகரத்தில் அமைந்துள்ளது. [1] உபவான் ஏரி என்ற பெயராலும் இந்த ஏரி அழைக்கப்படுகிறது. சன்சுகிருதி என்ற கலை விழாவை நடத்துவதற்கு இந்த ஏரி பெயர் பெற்றதாகும். [2] கணேச சதுர்த்தி பண்டிகையின் இறுதி நாளில் விநாயகர் சிலையை நீரில் மூழ்கவைக்கக் கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான கணபதி சிலைகளையும் இங்கே காணலாம். ஏரியானது நீர் வழங்கலுக்காக யே.கே.சிங்கானியாவால் நிறுவப்பட்டு புனரமைக்கப்பட்டது. உபவான் ஏரியில் சிங்கானியா விநாயகர் கோவிலையும் கட்டினார். கவந்த பாக், சிவாய் நகர், கணேசு நகர், வசந்த விகார் மற்றும் வர்தக் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகே உபவான் ஏரி அமைந்துள்ளது. தானேவில் வசிக்கும் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும் ஏரி திகழ்கிறது. தானேவில் உள்ள மிகப்பெரிய ஏரிகள் ஒன்றாகக் கருதப்படும் உபவான் ஏரி யெவ்வூர் மலைகளால் சூழப்பட்டு இரண்டாம் போக்ரான் பகுதியில் காணப்படுகிறது. நகரத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத ஏரிகளில் ஒன்றான உபவான் ஏரி தானே 'காதலர்களின் சொர்க்கமாக' கருதப்படுகிறது. [3] முதலாம் போக்ரான் மற்றும் இரண்டாம் போக்ரான் சாலைகளின் சந்திப்பையும் இந்த ஏரி உருவாக்குகிறது. ஒருகாலத்தில் முழு தானே நகரத்திற்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருந்த உபவான் ஏரி இப்போது முதன்மையாக பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தானே மாநகராட்சி நகரத் தந்தையின் அதிகாரப்பூர்வமான குடியிருப்பு ஏரிக்கு அருகில் உள்ளது. [4] [5]

உப்வான் ஏரி
Upvan Lake
உப்வான் ஏரி Upvan Lake is located in மகாராட்டிரம்
உப்வான் ஏரி Upvan Lake
உப்வான் ஏரி
Upvan Lake
அமைவிடம்தானே, மகாராட்டிரம்
ஆள்கூறுகள்19°13′17.61″N 72°57′21.65″E / 19.2215583°N 72.9560139°E / 19.2215583; 72.9560139
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு0.06 km2 (0.023 sq mi)

சன்சுகிருதி கலை விழா 2015 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபோது உபவான் ஏரி நன்கு அலங்கரிக்கப்பட்டது. திருவிழாவின் போது 50,000 பேருக்கும் மேற்பட்டோர் ஏரிக்கு வருகை தந்தனர். [6]

படக்காட்சி தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Two youngsters drowned at Upvan Lake, Thane". The Times of India.
  2. "Sanskruti Arts Festival". sanskrutiartsfestival.com.
  3. "Thane cops crack down on couples". Mumbai Mirror.
  4. "Plans on for a pollution-free Upvan Lake". The Times of India.
  5. "Thousands Of Devotees Celebrating Chhath Puja Flock To Upvan Lake". THANE MIRROR. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
  6. "Record turnout: Over 50,000 visit Upvan on Day 3 of Arts Fest". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/thane/record-turnout-over-50k-visit-upvan-on-day-3-of-arts-fest/articleshow/62499870.cms. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்வான்_ஏரி&oldid=3545080" இலிருந்து மீள்விக்கப்பட்டது