உமய்யா மசூதி

உமய்யா மசூதி (அரபி: جامع بني أمية الكبير , ஆங்கிலம்: Umayyad Mosque)அல்லது டமாசுக்கசு பெரிய மசூதியானது உலகின் மிகப்பழமையான மற்றும் பெரிய மசூதிகளில் ஒன்றாகும். இது சிரியா நாட்டின் தலைநகரான டமாசுக்கசு நகரில் உள்ளது. இசுலாமிய இறைதூதர்களில் ஒருவரான யகியா எனவரின் சமாதி இங்கு உள்ளது. இவரே கிறித்தவர்களால் யோவான் என அழைக்கப்படுகின்றார். மேலும் இசுலாமிய பேரரசரான சலாத்தீனின் சமாதியும் இங்கேயே உள்ளது. இது சன்னி முசுலிம்களின் வழிபாட்டுத்தலமாக உள்ள பொழுதும் சியா முசுலிம்களுக்கும் முக்கிய வரலாற்று தலமாக உள்ளது. கர்பலா போரில் உமய்யா கலிபாவான முதலாம் யாசித் என்பவரால் முறியடிக்கப்பட்ட சியா முசுலிம்களின் மூன்றாவது இமாமான உசைனின் (முகம்மது நபியின் பேரன்) தலை இங்குதான் காட்சிக்கு வைக்கப்பட்டது.

உமய்யா மசூதி
جامع بني أمية الكبير
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்டமாசுக்கசு, சிரியா

2001ம் ஆண்டு இந்த மசூதிக்கு வருகை தந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இயேசுவிற்கு திருமுழுக்கு செய்வித்த யோவானின் (யகியா) சமாதியை பார்வையிட்டார். இதுவே இவரின் முதலாவது மசூதி தரிசனம் ஆகும்.[1].

வரலாறு

தொகு
 
இறைதூதர் யகியாவின் சமாதி

முன்பு இந்த மசூதி இருந்த இடத்தில் பண்டைய ஆர்மீனியர்களின் கடவுலான ஃஆத் என்பரின் கோவில் இருந்தது. பின்பு ரோமானியர்களின் காலத்தில் அந்த கோவில் இடிக்கப்பட்டு வியானுக்கு (சூப்பிடறுக்கு) கோவில் கட்டப்பட்டது. இதன் பிறகு பைசாந்தியர்களின் காலத்தில் அதுவும் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் யோவானுக்காக ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.
இதன் பிறகு 636ம் ஆண்டு டமாசுகசு நகரம் முசுலிம்களால் கைப்பற்றப்பட்டது. இதன் பிறகு முசுலிம்கள் இந்த தேவாலாயத்தில் கிறித்தவர்களுடன் சேர்ந்து தங்கள் வழிபாடுகளையும் நடத்தினார்கள். சிறிது காலத்திற்குப்பிறகு இருமதத்தவர்களும் செங்கல் சுவர்களை எழுப்பி தங்கள் வழிபாட்டுத் தலங்களை பிரித்துக்கொண்டனர். இதன் பிறகு உமய்யா கலிபாவான முதலாம் அல்-வாலித் காலத்தில் மொத்த பகுதியும் கிறித்தவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டது. பிறகு கி.பி. 706 மற்றும் 715ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தமாக இடிக்கப்பட்டு இன்று காணப்படும் மசூதி கட்டப்பட்டது. இந்த மசூதி கட்டப்பட்ட காலத்திலேயே டமாசுக்கசு நகரம் நடுகிழக்கு நாடுகளிலேயே மிகவும் முக்கிய நகரமாகவும், உமய்யாக்களின் தலைநகரமாகவும் மாறியது.

கட்டிடக்கலை

தொகு
 
நபி ஈசா கோபுரம்

உமய்யா மசூதியானது மதீனாவில் இருந்த முகம்மது நபி (சல்) அவர்களின் வீட்டை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது. இது மசூதியாக மட்டும் இல்லாமல் பாடசாலையாகவும், மருத்துவமனையாகவும், அரசியல் ஆலோசனை கூடமாகவும் செயல்படும்படி கட்டப்பட்டது. இதை அழகுபபடுத்த பைசாந்திய பேரரசை சேர்ந்த 200 தேர்ந்த கட்டிடக் கலைஞ்கற்கள் வரவழைக்கப்பட்டார்கள். இதன் வெளிப்புறச்சுவர்கள் வியாழன் கோவிலின் பாணியில் அழகூட்டப்பட்டது. இது கட்டிமுடிக்கப்பட்ட பொழுது, இதுவே அந்த நேரத்தின் உலகின் மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்பட்டது. இதன் தொழுகைக்கூடமானது, செருசலம் நகரில் உள்ள அல்-அக்சா மசூதியின் பாணியில் உள்ளது. பெரும்பாலும் வெள்ளை நிற சலவைக்கற்களே இதை அலங்கரித்த பொழுதும், 4,000 சதுர மீட்டருக்கும் அதிகமான அளவில் தங்க சலவைக்கற்களும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 1893ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு தீவிபத்தில் இந்த தங்கக்கற்கள் சிறிது சேதப்பட்டன.
இந்த மசூதியின் தென்கிழக்கு மூலையில் இருக்கும் கோபுரத்திற்கு (மினரா) ஈசா கோபுரம் (இயேசுவின் கோபுரம்) என்று பெயர். பெரும்பாலான முசுலிம்கள், உலக இறுதி நாட்களில் ஈசா நபி (இயேசு) இங்குதான் காட்சிதருவார் என நம்புகின்றனர்.]].[2]

படக்காட்சி

தொகு

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமய்யா_மசூதி&oldid=2757409" இலிருந்து மீள்விக்கப்பட்டது