உமர்கோட் தொல்பொருள் அருங்காட்சியகம்

பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ளது

உமர்கோட் தொல்பொருள் அருங்காட்சியகம் (Archaeological Museum Umerkot) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள உமர்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உமர்கோட் அருங்காட்சியகம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. 1968 ஆம் ஆண்டில் ஒரு தொல்லியல் அருங்காட்சியகமாக இது நிறுவப்பட்டது.[1]

உமர்கோட் தொல்பொருள் அருங்காட்சியகம்
Archaeological Museum Umerkot
عمرکوٹ عجائب گھر
Map
நிறுவப்பட்டது1968 (1968)
அமைவிடம்உமர்கோட் மாவட்டம், சிந்து மாகாணம், பாக்கித்தான்
உரிமையாளர்சிந்து அரசாங்கம்
வலைத்தளம்sindhculture.gov.pk

முகலாயர் காலத்தின் ஏராளமான நாணயங்கள், பழைய துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வாள்கள், கவசங்கள், அம்புகள், வில், தலைக்கவசங்கள் மற்றும் பிற போர் பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள், அரச ஆவணங்கள், கையெழுத்து மாதிரிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "ARCHAEOLOGICAL MUSEUM UMERKOT". antiquities.sindhculture.gov.pk. Archived from the original on 9 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 December 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Sindh Tourism Development Corporation - About". stdc.gos.pk. பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.