உமா நேரு

இந்திய அரசியல்வாதி

உமா நேரு என்பவர் இந்திய விடுதலைப் போராட்டப் பெண்மணி மற்றும் அரசியலாளர் ஆவார். இவர் சவகர்லால் நேருவின் உறவினர் ஆவார். 

உமா நேருUma Nehru
பிறப்பு(1884-03-08)8 மார்ச்சு 1884
ஆக்ரா, வடமேற்கு மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு28 ஆகத்து 1963(1963-08-28) (அகவை 79)
இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியாn
பணிஇந்திய விடுதலை இயக்கம், மக்களவை (இந்தியா) உறுப்பினர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கைத்
துணை
சாம்லால் நேரு
பிள்ளைகள்சியாம் குமாரி கான்
ஆன்ந்த குமார் நேரு
உறவினர்கள்நேரு-காந்தி குடும்பம்

விடுதலைப் போராட்டச் செயல்கள் தொகு

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உமா ஸ்த்ரீ தர்பன் என்ற மாத இதழில் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை எழுதினார். இந்த இதழ் ராமேசுவரி நேரு என்பவரால் தொடங்கப்பட்டது ஆகும். [1] உமா நேரு உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கு கொண்டார். சிறைக்கும் சென்றார். [2] இந்தியா விடுதலை அடைந்த பிறகு இவர் உத்தர பிரதேசத்தில் சித்தாபூர் என்ற தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] மேலும் 1962 முதல் தமது காலம் இறுதி வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[4]

சொந்த வாழ்க்கை தொகு

ஆக்ராவில் பிறந்த உமா நேரு ஊப்லியிலுள்ள செயிண்ட் மேரி கான்வென்ட்டில் கல்வி கற்றார். [3] 1901 ஆம் ஆண்டு சவகர்லால் நேருவின் உறவினர் சாம்லாலை மணந்தார். இந்த தம்பதியருக்கு சியாம் குமாரி என்ற மகள், ஆனந்தகுமார் என்ற மகன் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். [5] ஆனந்தகுமார் நேருவின் மகனான அருண் நேரு 1980 ஆம் ஆண்டுகளில் இராசீவ் காந்தி அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக இருந்தார். உமா நேரு 1963 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 28 அன்று லக்னோவில் இறந்தார். [6]

மேற்கோள் தொகு

  1. Anup Taneja (2005). Gandhi, Women, and the National Movement, 1920-47. Har-Anand Publications. பக். 46–47. 
  2. R. S. Tripathi, R. P. Tiwari (1999). Perspectives on Indian Women. APH Publishing. பக். 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7648-025-8. 
  3. 3.0 3.1 "Members Bioprofile". 164.100.47.132. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-06-15.
  4. http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/n.pdf
  5. Nehru-Gandhi family tree.
  6. "Homage to Uma Nehru". 30 August 1963. p. 5. 

நூலடைவு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_நேரு&oldid=3545104" இலிருந்து மீள்விக்கப்பட்டது