உமேதா ராம் பெனிவால்

உமேதா ராம் பெனிவால் (Ummeda Ram Beniwal; பிறப்பு சூலை 15,1977) இராசத்தானின் பார்மேரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2024இல் பார்மேர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற கீழவையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.[1][2][3]

உமேதா ராம் பெனிவால்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்கைலாசு சவுத்ரி
தொகுதிபார்மேர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூலை 1977 (1977-07-15) (அகவை 47)
பொனியோன் கா தாலா, பைது, இராசத்தான்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி (2024 வரை)
கல்விஇளங்கலை
முன்னாள் கல்லூரிமகாசிறீ தயானந்த் சரசுவதி பல்கலைக்கழகம்
மூலம்: [1]

அரசியல் வாழ்க்கை

தொகு

பெனிவால் 2024 வரை இராச்டிரிய லோக்தந்த்ரிக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். பின்னர் 2024 மார்ச் 16 அன்று ஜெய்ப்பூரில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 2024 இந்திய பொதுத் தேர்தலில் இவர் காங்கிரசு கட்சி சார்பில் பார்மேர் மக்களவைத் தொகுதியிலிருந்து 18ஆவது மக்களவை உறுப்பினராக ஆனார்.[4][2]

மேற்கோள்கள்

தொகு
  1. तक, राजस्थान (2024-06-04). "Ummedaram Beniwal Barmer Lok Sabha Seat Results 2024: कांग्रेस के उम्मेदाराम ने निर्दलीय रविंद्र भाटी को हराया". Rajasthantak (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  2. 2.0 2.1 "Barmer LS Election Results Live: बाड़मेर में कांग्रेस जीती, भाटी दूसरे और केंद्रीय मंत्री चौधरी तीसरे नंबर पर". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  3. "Ummeda Ram Beniwal(Rashtriya Loktantrik Party):Constituency- BAYTOO(BARMER) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  4. Bureau, The Hindu (2024-03-16). "Senior RLP leader’s shift to Congress puts to rest alliance speculations in Rajasthan" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/senior-rlp-leaders-shift-to-congress-puts-to-rest-alliance-speculations-in-rajasthan/article67958574.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமேதா_ராம்_பெனிவால்&oldid=4095361" இலிருந்து மீள்விக்கப்பட்டது