உமையாள்புரம் காசி விசுவநாதர் கோயில்
உமையாள்புரம் காசி விசுவநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் கும்பகோணத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து வடக்கே 23 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள உமையாள்புரம் என்னுமிடத்தில் உள்ளது. [1]
இறைவன், இறைவி
தொகுஇங்குள்ள மூலவர் காசி விசுவநாதர் ஆவார். இறைவி குங்கும சுந்தரி அம்மன் ஆவார். [1]
புராணம்
தொகுஇக்கோயிலைப் பற்றி பல புராண செய்திகள் வழங்கப்படுகின்றன. சிவபெருமான் மீது பக்தி கொண்டிருந்த கந்தர்வப்பெண் இங்கு தீர்த்தம் ஒன்றினை உருவாக்கி சிவ தரிசனத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது இறைவன், இறைவியுடன் வந்து அவருக்குக் காட்சி தந்ததாகவும், அந்த கந்தர்வப்பெண் சிவனுக்கு கோயில் எழுப்பியதாகவும் கூறுவர். [1]