உம்ன்கோட் ஆறு

உம்ன்கோட் ஆறு (Umngot River), தொளகி ஆறு அல்லது வா உம்ன்கோத் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான மேகாலயாவில் மேற்கு ஜைண்டியா மலை மாவட்டத்தில் உள்ள ஜைண்டியா மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள தொளகி என்ற சிறிய நகரத்தின் வழியாக பாயும் ஓர் ஆறு ஆகும்.[1][2] இந்த நகரம் ஒப்பீட்டளவில் பரபரப்பாகக் காணப்படும். இது இந்தியாவிற்கும் வங்களாதேசத்திற்கும் இடையிலான வர்த்தக நகராகச் செயல்படுகிறது. இந்த ஆறு அதன் தூய்மை மற்றும் வெளிப்படையான நீர் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றது. இது ஒரு புலப்படும் ஆற்றுப் படுகையினைக் கொண்டுள்ளது.[3]

உம்ன்கோட் ஆறு

சூழல்

தொகு

இந்தியாவின் தூய்மையான ஆறுகளில் ஒன்றான உம்ன்கோட், உள்ளூர் மீனவர்களுக்கு ஒரு முக்கியமான மீன்பிடி இடமாகும்.[4] இந்த ஆறு இந்தியா-வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. மேலும் ஆற்றின் வெண்மைப் பகுதி, மின்னோட்டத்தின் உயர்வால் ஏற்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லையைக் குறிக்கிறது.[5]

 
உம்ங்கோட்டின் மீது தாவ்கி பாலம்
 
ஆற்றில் மீன்பிடிப்போர்

ஒரு தொங்கு பாலம், தாவ்கி பாலம், உம்கோட் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது 1932இல் கட்டப்பட்டது. மேலும் இது ஒரு சுற்றுலா ஆர்வமுள்ள இடமாகும்.[6][7]

திட்டங்கள்

தொகு

ஏப்ரல் 2021இல், மின்சாரப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, ஆற்றின் மீது அணை கட்ட மேகாலயா அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டம் முன்மொழியப்பட்ட 210 மெகாவாட் உம்ன்கோட் நீர்மின் திட்டமாகும். இது உள்ளூர் கிராமவாசிகளிடமிருந்து பெரும் எதிர்ப்பையும் பெற்றது. இதன் கட்டுமானம் சுற்றுலாவைச் சீர்குலைக்கும் என்று அஞ்சினர்.[8] இறுதியில் இத்திட்டம் கைவிடப்பட்டது .[9]

மேற்கோள்கள்

தொகு
  1. Saha, Devanik (2015-10-31). "In Pictures: Umngot River, Meghalaya's Unexplored Paradise". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
  2. Desk, Sentinel Digital (2021-10-07). "Dawki River in Meghalaya, Known for its Clear, Transparent Water and Divine Natural Beauty - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
  3. "This Indian river is going viral for its crystal clear water; read to know more". https://timesofindia.indiatimes.com/travel/travel-news/this-indian-river-is-going-viral-for-its-crystal-clear-water-read-to-know-more/articleshow/87768754.cms. பார்த்த நாள்: 2024-05-27. 
  4. "Meghalaya govt. defends plan to dam river Umngot" (in en-IN). The Hindu. 2021-04-16. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/other-states/meghalaya-govt-defends-plan-to-dam-river-umngot/article34331095.ece. 
  5. Saha, Devanik (2015-10-31). "In Pictures: Umngot River, Meghalaya's Unexplored Paradise". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
  6. Saha, Devanik (2015-10-31). "In Pictures: Umngot River, Meghalaya's Unexplored Paradise". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
  7. "Dawki Suspension Bridge (Dawki, 1932)". Structurae (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
  8. "Meghalaya govt. defends plan to dam river Umngot" (in en-IN). The Hindu. 2021-04-16. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/other-states/meghalaya-govt-defends-plan-to-dam-river-umngot/article34331095.ece. 
  9. "After protests, Meghalaya dam project ‘scrapped’" (in en-IN). The Hindu. 2021-09-01. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/other-states/after-protests-meghalaya-dam-project-scrapped/article36219044.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்ன்கோட்_ஆறு&oldid=4139918" இலிருந்து மீள்விக்கப்பட்டது