உயர்செறிவு கொழுப்புப்புரதம்
உயர்செறிவு கொழுப்புப் புரதம் அல்லது உயரடர்த்தி கொழுமியப்புரதம் (High-density lipoprotein (HDL)) முக்கியமான ஐந்து வகை கொழுப்புப் புரதங்களிலே மிகச் சிறியதும் அதிக செறிவுடையதுமாகும். தண்ணீரில் கலந்த எண்ணெய் மிதப்பது போல நமது குருதியில் உள்ள கொழுப்பு மிதக்காமல் இருக்க அவை புரதங்களோடு பிணைக்கப்பட்டு உள்ளன.
HDL-C குருதிச் சோதனை உயர்செறிவு கொழுப்புப் புரத மூலக்கூறில் உள்ள கொலஸ்டிரால் அளவைக் கணக்கிட்டுச் சொல்கிறது. இம் மூலக்கூறு இரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புக் கட்டியை எடுத்துச் செல்கிறது. எனவே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றைக் குறைக்கிறது.[1] எனவே HDL-C நல்ல கொலஸ்டிரால் என அழைக்கப்படுகிறது.[2]
சான்றுகள்
தொகு- ↑ Sirtori, Cesare R. (October 2006). "HDL and the progression of atherosclerosis: new insights". European Heart Journal Supplements.
- ↑ "Cardiology patient page. The "good cholesterol": high-density lipoprotein". Circulation 111 (5): e89–e91. Feb 2005. doi:10.1161/01.CIR.0000154555.07002.CA. பப்மெட்:15699268. http://circ.ahajournals.org/cgi/content/full/111/5/e89.