உயிரினங்களின் பரிணாம வரலாறு

புவி 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதிலிருந்து உயிரினங்கள் தோன்றிய விதமும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும் பற்றி ஆராயும் வரலாற்றுப் பிரிவே உயிரினங்களின் பரிணாம வரலாறு எனப்படும். புவி தோன்றி 1 பில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரினங்கள் தோற்றம் பெற்றன. தற்போதுள்ள உயிரினங்களுக்கிடையே உள்ள அமைப்பொற்றுமை ஒரு பொது மூதாதையர் அனைத்து உயிரினங்களுக்கும் உள்ளதை உறுதிப்படுத்துகின்றது. புவியில் முதலில் தோன்றிய உயிரினமாக நுண்ணுயிரி வகையொன்றே கருதப்படுகின்றது. முதல் உயிரியானது வேதியியல் தாக்கங்களின் விளைவால் நீரினடியில் உருவாகியவையாகும். இதற்கான சூழல் தரையில் இல்லாமையால் ஆழமான நீரே இதற்குப் பொருத்தமான ஊடகமாக விளங்கியது. இவ்வகை வேதியல் தாக்கங்களுக்கான சக்தி கடலடி எரிமலைகளாலும், புற ஊதாக் கதிர்களாலும், மின்னலாலும் வளங்கப்பட்டது.

தற்போசணை நுண்ணுயிரிகள் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. இவை தற்போதைய சயனோபாக்டீரியாக்களைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. இவற்றினால் ஆக்சிசன் வாயு புவியின் வளிமண்டலத்தில் தோன்ற ஆரம்பித்தது. அதுவரையும் கரியமிலவாயு, நீராவி, அமோனியா, ஐதரசன் போன்ற வாயுக்களே புவியின் வளிமண்டலத்தில் காணப்பட்டன. இதன் காரணமாக ஓசோன் வாயு உருவாகி நீரிலிருந்து நிலத்துக்கு உயிரினங்கள் பரவலடைவது சாத்தியமாகியது. ஓசோன் வாயு இல்லாவிடில் நிலமும் ஆழமற்ற கடற்பிரதேசங்களும் உயிரினங்களுக்கு ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் தாக்கும். இதன் காரணமாக தற்போசணை நுண்ணுயிரிகளிலிருந்தும் ஏனைய பாக்டீரியாக்களிலிருந்தும் 1.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிணாமித்து வந்த மெய்க்கருவுயிரிகளான தாவரங்கள் மற்றும் விலங்குகள் நீரிலிருந்து நிலத்தை ஆக்கிரமித்தன.

மிகப்பழமையான நிலத்தாவரங்கள் 450 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டவையாகும். 525 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேம்பிரியன் காலத்தில் முள்ளந்தண்டுளிகள் தோற்றம் பெற்றன. ஜுரஸிக் மற்றும் கிரேடீசியஸ் காலத்தில் ஊர்வன வகையைச் சார்ந்த தொன்மாக்கள் ஆதிக்கம் செலுத்தின. அப்போது தோற்றம் பெற்ற முலையூட்டிகள் சிறிய பூச்சியுண்ணிகளாகவே இருந்தமையால் அக்காலம் ஊர்வனவற்றின் காலம் என அழைக்கப்படுகின்றது. 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு விண்கல் ஒன்று மோதியமையால் பறக்கமுடியாத தொன்மாக்கள் உட்பட பல உயிரினங்கள் அழிந்து போயின. இயற்கைத் தேர்வினால் அவ்வழிவிற்குப் பிற்பட்ட சூழலானது பறவைகளுக்கும் முலையூட்டிகளுக்கும் சாதகமாக அமைந்தது.

சுவட்டு ஆதாரங்களின் படி பூக்கும் தாவரங்கள் 130 தொடக்கம் 90 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு பூச்சிகள் தேவைப்பட்டமையால் அதே காலத்தின் தேனிக்கள் போன்ற சமூகப் பூச்சிகளும் பரிணாம வளர்ச்சி பெற்றன. இருகால்களில் நடக்கும் வாலில்லாக் குரங்குகளில் இருந்து 6 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மனித இனம் தோற்றம் பெற்றது. பழங்கால மனித இனங்களுக்கு சிம்பன்சி அளவான மூளையே காணப்பட்டாலும் 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பிலிருந்து மனித மூளையின் அளவு படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது.

புவியின் பழங்கால வரலாறு

தொகு
புவியினதும் உயிரினங்களினதும் வரலாறு
-4500 —
-4000 —
-3500 —
-3000 —
-2500 —
-2000 —
-1500 —
-1000 —
-500 —
0 —
சந்திரன் உருவாகியது
? புவியின் மேற்பரப்பு குளிர்வடைந்தது, சமுத்திரங்கள் உருவாகியது
விண்கல் தாக்கம்
? உயிரினங்கள் வாழ்ந்தமைக்கான மிகப்பழைய ஆதாரம்
வளிமண்டலத்தில் ஒக்சிஜன் வாயு
மிகப்பழைய பல்கல உயிரினம்
மிகப்பழைய பூஞ்சை
மிகப்பழைய நைடேரியாக்கள்
மிகப்பழைய நிலவாழ் முள்ளந்தண்டிலிகளும் தாவரங்களும்
மிகப்பழைய நிலவாழ் முள்ளந்தண்டுளிகள்
மிகப்பழைய நிலவாழ் தொன்மா
பறக்கா தொன்மாக்களின் அழிவு
Scale:
Ma (மில்லியன் வருடங்கள்)

புவியின் மிகப்பழமையான விண்கற் படிமங்கள் கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்டவை. அறிவியலாளர்களின் கருத்துக்கிணங்க சந்திரன் 40 மில்லியன் வருடங்களுக்கு பிறகு ஒரு கோள் போன்ற விண்வெளிப் பொருள் புவியின் மீது மோதியதால் உருவானது. இதனாலேயே சந்திரனின் மேற்பரப்பின் கட்டமைப்பு புவியுனுடையதைப் போலக் காணப்படினும் அதன் உட்பகுதி புவியின் இரும்பு நிறைந்த உட்பகுதி போலல்லாமல் உள்ளது. புவியின் மேற்பரப்பு கற்களில் பழமையானவற்றின் காலம் 3.8 பில்லியன் வருடங்களைத் தாண்டாமையால் அதுவரை புவியின் மேற்பரப்பானது உருகிய நிலையிலேயே காணப்பட்டதெனெக் கூற முடியும். சந்திரனில் 3.8 தொடக்கம் 4 பில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவாகிய பல விண்கல் வீழ் பள்ளங்களைக் காண முடியும். சூரியக் குடும்பத்தின் தோற்றத்தின் போது மீதமாயிருந்த விண்கற்களின் மோதுதலாலேயே இவ்வாறான பள்ளங்களை சந்திரனில் காண முடியும். சந்திரனை விடப் புவியிடம் அதிக ஈர்ப்பு சக்தி காணப்பட்டமையால் புவியில் அதனை விட அதிகமான விண்கற் தாக்குதல் அக்காலப் பகுதியில் இடம்பெற்றது. எனினும் புவியின் மேற்பரப்பில் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இவ்விண்கற்களின் வீழ்வால் புவியின் பழங்கால வளிமண்டலம் அழிக்கப்பட்டது. எரிமலை வெடிப்புகளிலிருந்தும் புவியில் விழுந்த வால்நட்சத்திரங்களாலும் புதிய எனினும் ஒக்சிசனற்ற வளிமண்டலமும் அதில் காணப்பட்ட நீராவியால் சமுத்திரங்களும் உருவாகின. இவ்வாறான சூழலிலேயே புவியில் உயிரினங்கள் தோற்றம் பெற்றன.

புவியில் உயிரினங்களுக்கான மிகப்பழைய ஆதாரம்

தொகு

உயிரினங்களின் தோற்றம்

தொகு

உயிரினங்களின் பரிணாமத்தில் சூழலின் தாக்கம்

தொகு

பல்கல உயிரினங்களின் தோற்றம்

தொகு

விலங்குகளின் தோற்றம்

தொகு

நீரிலிருந்து நிலத்திற்கு

தொகு

மனிதனின் தோற்றம்

தொகு

தற்கால உயிரினச் சூழல்

தொகு