உயிரியலின் சுருக்கம்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

உயிரியல் உருவரை (outline of biology) உயிரியல்சார் கருப்பொருள்களுக்கும் தலைப்புகளுக்குமான வரைவுரு கீழே வழங்கப்படுகிறது. உயிரியல் உயிரினங்களை பற்றிய அறிவியல். இது பண்புகள், வகைபாடு, உயிரிகளின் நடத்தைகள், சிற்றினங்களின் இருப்பு, மற்றும் சூழ்நிலையுடனான அவற்றின் தொடர்பு பற்றிய புரிதலையும் அறிவையும் வழங்கும் ஒரு பிரிவாகும். மேலும் இது பரந்துபட்ட உள்ளடக்கங்களை கொண்ட பிரிவாக உள்ளது. எனினும் உயிரினங்களிடையேயுள்ள உறவுகளை உயிர் இயற்பியல் தொடங்கி சூழியல் வரை உயிரியல் புலம் உள்ளடக்குகிறது. உயிரியலில் சொல்லப்படும் அடிப்படைக்கொள்கைகள் அதன் சேய்த்துறைகள் அனைத்தாலும் ஏற்கப்படுகிறது. இதற்கு சான்றாக வெப்ப இயக்கவியல் மற்றும் ஆற்றல் அழிவின்மை விதி உள்ளிட்டவைகள் உள்ளன.[1]

டுரோசொபில்லா மெலனோகாசுட்டர்-பொதுவாக பயன்படும் வகைமை உயிரினம்

உயிரியலின் கிளைகள் தொகு

உயிரியல் கிளை - இது ஒரு உயிரி அறிவியல் என்றும் இதன் கிளைகள் அனைத்தும் வாழ்க்கை அறிவியல் என்றும் குறிப்பிடப்படுகிறது.

  • உடற்கூறியல் - மனிதன், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களின் உடலமைப்பின் பகுதிக்கூறுகளின் உட்கட்டமைப்பை பற்றிய அறிவியல்
  • வான் உயிரியல் – பேரண்ட உயிர்களின் படிமலர்ச்சி, பரவல், புறவெளி உயிரியல், புறவெளி புதைபடிமவியல், உயிரி வானியல் ஆகிய உட்பிரிவுகளை உள்ளடக்கியது.
  • உயிரிப்பொறியியல் – உயிரித் தொழில் நுட்பவியலுடன் தொடர்புடைய உயிரியல் பயன்பாட்டு பொறியியல், உயிரிப் பொறியியல் ஆகும்.
  • உயிர் தகவலியல் - இது தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்தல், தகவல் தொகுப்பு, மற்றும் உயிர் மரபுத்தகவல்களைப் பேணுதல் சார்ந்த அறிவாகும்.
  • உயிரியக்கவியல் – உயிரினங்களின் இயக்கவியல் சார்ந்த அறிவு இதுவாகும்.
  • உயிரி வேதியியல் - உயிர்க்கல அளவில் நடக்கும் வேதி வினைகள் பற்றியும், வாழ்க்கை இயக்கவியல் செயற்பாடுகளில் வேதிவினைகளின் பங்கு பற்றிய அறிவியல் இதுவாகும்.
  • உயிரிப்புவியியல் – புவியில் சிற்றினங்களின் பரவல், அவற்றின் காலநிலைத்தொடர்புகளை அறியும் பிரிவு.
  • உயிரி இயற்பியல் - இயற்பியல் வழியாக உயிரிய செயற்பாடுகளைப் பற்றி அறியும் பிரிவு.

உயிரியலாளர்கள் தொகு

 
சார்லசு டார்வின்
 
கிரிகோர் மெண்டல்
 
உரொனால்டு பிஷர்
 
ஜே. பி. எஸ். ஆல்டேன்

வெளி இணைப்புகள்  தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Frank B. Salisbury; Cleon W. Ross (1992). Plant physiology. Brooks/Cole Pub Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-534-15162-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியலின்_சுருக்கம்&oldid=3769120" இலிருந்து மீள்விக்கப்பட்டது