உயிரிய உயிர்வளித் தேவை
உயிரிய உயிர்வளித் தேவை (Biochemical Oxygen Demand) என்பது நீரில் மக்கக்கூடிய கரிம வேதிப்பொருட்களைக் கண்டறிவதற்கான ஒரு வேதியியல் சோதனையாகும். இச்சோதனை நீரின் தரத்தை அறிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். இது பல வேதியல் கூறாய்வுச் சோதனைகளைப் போல மிக துல்லியமானதாக இல்லையெனிலும் நீரில் மாசுகளின் அளவை (மாசளவை) தோராயமாக கண்டுபிடிக்க உதவுகிறது. இச்சோதனை, அனைத்து கழிவு நீர் தூய்மைப்படுத்து நிலையங்களிலும் தூய்மையாக்குந் தரத்தை கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.[1][2][3]
இயல்பான உயிரி வேதிகளின் உயிர்வளித் தேவையின் அளவு
தொகுஉயிரிய உயிர்வளித் தேவையின் அளவு ஒரு லிட்டரில் எத்தணை மில்லிகிராம் எனக் கணக்கிடப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் mg/L அல்லது " மிகி/லி" என்னும் அளவீட்டு குறியால் குறிப்பது வழக்கம். தூய்மையான ஆற்று அல்லது குளத்து நீரில் 1 mg/Lக்கு (1 மிகி/லி -க்கு) குறைவாக இருக்கும். சிறிதளவு மாசடைந்த நீரில் ஏறத்தாழ 2 முதல் 8 மிகி/லி வரை இருக்கும். நகரக் கழிவு நீர் தூய்மைப்படுத்து நிலையங்களிலும் தூய்மைசெய்த பிறகு வெளியேறும் நீரில் ஏறத்தாழ 20 மிகி/லி (mg/L) அல்லது அதற்கு குறைவாக இருக்கும். மிகுந்த மாசடைந்த நீரில் சுமார் 400 மிகி/லி (mg/L) -க்கும் அதிகமாக உயிரிய உயிர்வளித் தேவையின் அளவு இருக்கும்.
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Clair N. Sawyer; Perry L. McCarty; Gene F. Parkin (2003). Chemistry for Environmental Engineering and Science (5th ed.). New York: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-248066-5.
- ↑ Goldman, Charles R.; Horne, Alexander J. (1983). Limnology. McGraw-Hill. pp. 88, 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-023651-8.
- ↑ Reid, George K. (1961). Ecology of Inland Waters and Estuaries. Van Nostrand Reinhold. pp. 317–320.