உயிரிய உலோகங்கள்
உயிரிய உலோகங்கள் (Biometals) என்பவை உயிரியல், உயிர்வேதியியல் மற்றும் மருத்துவம் முதலிய அறிவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் உலோகங்களைக் குறிக்கும். மனித உடலின் இயல்பான நடவடிக்கைகளுக்கு மிகவும் இன்றியமையாதனவாக விளங்கும் தாமிரம், துத்தநாகம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தனிமவரிசை அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள வேதிப்பொருட்களில் மூன்றில் இரண்டு பங்கு பொருட்கள், வெவ்வேறு வகையான பண்புகளைக் கொண்டுள்ள உலோகங்களாகும்[1]. பலவிதமான பண்புகளைப் பெற்றுள்ள இவ்வுலோகங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக இயற்கை மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கையில் தோன்றும் உயிரிய உலோகங்கள்
தொகுவாழும் உயிரினங்களில் காணப்படும் புரதங்களின் செயல்பாட்டுக்கு உலோகப் புரதங்கள் மற்றும் நொதிகள் போன்ற உலோக அயனிகள் அவசியமான துணைக்காரணிகளாக விளங்குகின்றன[2]. ஆக்சிசன் போக்குவரத்து மற்றும் டி.என்.ஏ நகலாக்கம் முதலிய செயல்பாடுகள் நொதிகளால் நிகழ்கின்றன. மனிதர்களில் டி.என்.ஏ பலபடியாக்க நிகழ்வு சரியாக செயல்பட மக்னீசியம் மற்றும் துத்தநாகம் முதலான தனிமங்கள்[3] அவசியமாக தேவைப்படுகின்றன. இவைதவிர, தைராய்டு சுரப்பியில் அயோடின்]] உள்ளதைப் போல வேறு சில உயிர் மூலக்கூறுகளும் அவற்றின் கட்டமைப்பில் உலோக அயனிகளைக் கொண்டுள்ளன[4] .
மருத்துவத்தில் உயிரிய உலோகங்கள்
தொகுஉலோக அயனிகள் மற்றும் உலோகச் சேர்மங்கள் பெரும்பாலும் நோயறிதல் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன[5]. இலித்தியம் மற்றும் தங்கத்தின் சேர்மங்களை மருந்தாகப் பயன்படுத்துவது போல உலோக அயனிகளைக் கொண்டுள்ள தனிமங்களை மருந்தாகப் பயன்படுத்த முடியும்[6][7]. சிலவகை உலோக சேர்மங்களும் அயனிகளும் அவை பெற்றுள்ள நச்சுத் தன்மை காரணமாக மனித உடலில் தீயவிளைகளையும் உண்டாக்குகின்றன[5]. உதாரணமாக, ஆர்சனிக் போன்ற ஆற்றல் மிக்க நச்சுகள் நொதிகளின் செயலை மட்டுப்படுத்தி அடினோசின் முப்பாசுப்பேட்டு உற்பத்தியைத் தடுக்கின்றன[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2021-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
- ↑ Banci, Lucia, ed. (2013). Metallomics and the Cell. Series editors Sigel, Astrid; Sigel, Helmut; Sigel, Roland K.O. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-5560-4. electronic-book பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-5561-1 ISSN 1559-0836 electronic-ISSN 1868-0402
- ↑ Aggett PJ (1985). "Physiology and metabolism of essential trace elements: an outline". Clin Endocrinol Metab 14 (3): 513–43. doi:10.1016/S0300-595X(85)80005-0 . PubMed
- ↑ Cavalieri RR (1997). "Iodine metabolism and thyroid physiology: current concepts". Thyroid 7 (2): 177–81. doi:10.1089/thy.1997.7.177 . PubMed
- ↑ http://www.nlm.nih.gov/medlineplus/druginfo/meds/a681039.html U.S. National Library of Medicine, Lithium. Drug information provided by AHFS Consumer Medication Information, 2014.
- ↑ http://rheumatology.oxfordjournals.org/content/36/5/560.full.pdf Kean, W. F., L. Hart, and W. W. Buchanan. "Auranofin." British Journal of Rheumatology 36 (1997): 560-572. Oxford Journals. Web. 26 July 2014.
- ↑ http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3183630/ Kaur, Tajpreet, Amritpal Singh, and Rajeshkumar Goel. "Mechanisms Pertaining to Arsenic Toxicity." Toxicology International 18.2 (2011): 87-93. National Center for Biotechnology Information. Web. 26 July 2014. doi:10.4103/0971-6580.84258 PubMed