உயிர்-தகவல் நுட்ப இணையதளங்கள்

மூலக்கூற்று உயிரியலின் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ மற்றும் புரதங்களை அறிய பல பயனுள்ள இணையதளங்கள் உள்ளன. (Bio-informatics) . இவைகளை பயன்படுத்தி ஓர் மரபணுவின் பயன் என்ன, நிறபிரியில் எவ்விடத்தில் உள்ளன என்பதை அறியலாம். மேலும் ஒரு தொடரி (Promoter) எவ்விடத்தில் உள்ளன என்பதையும் , அத்தொடரி உண்மையில் டாட்டா பேழை (TATA box) இருக்கிறதா? இல்லையா என்பதை கணிக்கலாம். மேலும் தொடர்ரூக்கிகளின் இணையும் வரிசை அல்லது செயலூக்கிகள் இணையும் வரிசை (promoter binding factor or transcription binding factor) களை காணலாம். ஒரு மரபணுவை பி.சி. ஆர். மூலம் பெருக்கபயன்படும் முன்தொடர் (Primer) வரைதலில் (designing) ஊசி-வளைவுகள், முன்தொடர்களுக்கு உள்ளயே இணைவுகள் உள்ளனவா (stem-loop, primer dimer and palindromic) என்பதை அறியலாம்.

ஒரு புதிய டி.என்.ஏ வரிசைகள் கண்டுபிடித்தால் அவைகள் எதனோடு ஒற்றுமை காட்டுகின்றன என்பதை ப்லச்ட் (Blast) என்னும் நிகழ்வு (மென்பொருள்) காணலாம். ஒரு புரதத்தின் அமைப்புகள் எவ்வாறு உள்ளன என்பதை அறியலாம். குறு ஆர்.என்.ஏ வின் இலக்குகளை பல இணைய தளங்களின் மூலம் அறியலாம்

இணையதளங்கள்

தொகு