உரிமைச் சாசனம் 08
உரிமைச் சாசனம் 08 என்பது 350 மேற்பட்ட சீன புலைமையாளர்களால் முதலில் கையெழுதிடப்பட்ட உரிமைப் பிரகடனச் சாசனம் ஆகும். இது சீனாவில் சர்வதிகாரம் முடிக்கப்பட்டு, மக்களாட்சி வர வேண்டும் என்றும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறது. இந்த ஆவணத்தை எழுதியதற்கான லியூ சியாபோ அவர்களுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சீன அரசு விதித்தது. இவருக்கு 2010 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கோரிக்கைகள்
தொகு- அரசமைப்புச் சட்டத் திருத்தம்
- அதிகாரங்களைப் பிரித்துவைத்தல்
- சட்டமியற்றும் மக்களாட்சி
- சுதந்திரமான நீதித்துறை
- பொதுக் கட்டுப்பாட்டுக்குள் அரச சேவகர்கள்
- மனித உரிமைகள் உறுதிப்பாடுகள்
- தேர்தல் முறையில் அரச சேவகர்களைத் தேர்தெடுத்தல்
- ஊர், நகர சமத்துவம்
- சேர்துகொள்வதற்கான உரிமை
- கூடல் சுதந்திரம்
- கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
- சமயச் சுதந்திரம்
- பொதுக் கல்வி
- சொத்துரிமை
- நிதி, வரி சீர்திருத்தம்
- சமூகப் பாதுகாப்பு/Social security.
- சூழல் பாடுகாப்பு
- கூட்டாட்சிக் குடியரசு
- Truth in reconciliation