உருகியுறைதல்
(உருகி உறைதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உருகியுறைதல் (Regelation) என்பது அழுத்தம் வழங்கப்படும் போது உருகுவதும் பின்னர் அந்த அழுத்தம் குறைக்கப்படும் போது மீண்டும் உறையும் நிகழ்வு ஆகும். எடுத்துக்காட்டாக இரு பனிக்கட்டித் துண்டுகளை இணைத்து அதிக அழுத்தம் கொடுத்து பின்னர் அந்த அழுத்தத்தை விடுவிக்க அவை இரண்டும் இணைந்து ஒரே பனிக்கட்டித் துண்டாகி விடுகிறது. அழுத்தம் அதிகரிக்கும் போது, உருகுநிலை குறைவதால் பனிக்கட்டி உருகுகிறது. அழுத்தம் குறையும் போது உருகுநிலை அதிகரிப்பதால் ஒன்றாக உறைந்து விடுகிறது. இதுவே உருகி உறைதல் எனப்படுகிறது, இதை உருகி இணைதல் எனவும் கூறலாம். உருகியுறைதல் பண்பைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பரடே ஆவார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Drake, L. D.; Shreve, R. L. (1973). "Pressure Melting and Regelation of Ice by Round Wires". Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 332 (1588): 51. doi:10.1098/rspa.1973.0013. Bibcode: 1973RSPSA.332...51D.
- ↑ Glossary of Meteorology: Regelation பரணிடப்பட்டது 2006-02-25 at the வந்தவழி இயந்திரம், American Meteorological Society, 2000
- ↑ Döppenschmidt, Astrid; Butt, Hans-Jürgen (2000-07-11). "Measuring the Thickness of the Liquid-like Layer on Ice Surfaces with Atomic Force Microscopy". Langmuir 16 (16): 6709–6714. doi:10.1021/la990799w.