உருங்குசு

போர்னியோ தீவைச் சேர்ந்த பூர்வீகப் பழங்குடி மக்கள்

ருங்குசு அல்லது ருங்குஸ், (மலாய்: Rungus அல்லது Bangsa Rungus அல்லது Momogun Laut; ஆங்கிலம்: Rungus People அல்லது Momogun Rungus; சீனம்: 莫莫根) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியா, போர்னியோ தீவைச் சேர்ந்த பூர்வீகப் பழங்குடி மக்களாகும்.[1]

ருங்குசு
Rungus People
Momogun Rungus
Momogun Laut
கூடாட், கம்போங் லோரோ கெச்சில் கிராமத்தில் ஒரு ருங்குசு மீனவர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா
* சபா
மொழி(கள்)
ருங்குசு மொழி, மலாய் மொழி
சமயங்கள்
கிறிஸ்தவம் (95%), இசுலாம், ஆன்ம வாதம் (5%)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கடசான்-டூசுன், மூருட், லுன் பாவாங்/லுன் டாயே

a Statistical Yearbook: Sabah, 2002, & Statistical Sabah Data 2020

கூடாட் தீபகற்பம், கோத்தா மருது, பித்தாசு பெங்கோகா தீபகற்பம், மற்றும் பெலூரான் (Kudat Peninsular, Kota Marudu, Pitas Bengkoka Peninsular, Beluran) சுற்றியுள்ள பகுதிகளிலும்; முதன்மையாக வடக்கு சபாவிலும் வசிக்கின்றனர். இவர்களை டூசுன் லாவுட் (Dusun Laut) என்று அழைப்பதும் உண்டு.

போர்னியோ டயாக் (Dayak People) இனக் குழுவின் ஒரு துணைக் குழுவினரான இவர்கள், ஒரு தனித்துவமான மொழி, உடை, கட்டிடக்கலை, பழக்க வழக்கங்கள் மற்றும் வாய்மொழி இலக்கியங்களை (Oral Literature) கொண்டுள்ளனர்.

பொது

தொகு

போர்னியோவில் உள்ள மற்ற பழங்குடி இனக் குழுக்களை (Indigenous Ethnic Groups in Borneo) போலவே, ருங்குசு மக்களின் கலாசாரமும் தானிய வகையான அரிசியைச் சுற்றியே அமைகிறது. இருப்பினும், தென்னை, வாழை பயிரிடுதல் இவர்களின் பண வருமானத்திற்கு உதவியாய் இருக்கின்றன.[2]

பழைமை முறையிலான தறிநெசவு (Backstrap Loom) மூலமாகப் பெண்கள் துணி நெய்கிறார்கள். மேலும் மணி வேலைப்பாடுகளில் இருந்து வீட்டு பாத்திரங்களை உருவாக்குகிறார்கள்.[3][4]

நவீன வாழ்க்கை

தொகு

ருங்குசுகள் பலர் இப்போது நகரங்களில் வேலை செய்து வருகிறார்கள். மேலும் இவர்கள் நீளவீடு (Long House) வாழ்க்கையைக் கைவிட்டு நவீன மலேசிய சமுதாய வாழ்க்கையில் ஐக்கியமாகியும் வருகிறார்கள்.

மோமோகன் ருங்குசு (Momogun Rungus) எனும் ருங்குசு மக்களின் எழுத்து முறைமை மிகவும் பழமையான பாரம்பரிய எழுத்துகளைக் கொண்டுள்ளது. இது சித்திர எழுத்து (Hieroglyph) எழுதும் வடிவங்களில் ஒன்றாகும். ருங்குசு மொழியில் (Rungus Language) சூரிப் (Surip Momogun) என்று அழைக்கப்படுகிறது.

ஆன்மவாதம்

தொகு

பாரம்பரியமாக அகமா லாபஸ் (Agama Labus) அல்லது லாபஸ் மதம் (Labus Religion) எனும் ஒரு நம்பிக்கை இவர்களிடம் உள்ளது. இதை ஆன்மவாதம் (Animism) என்று சிலர் முத்திரை குத்துகிறார்கள். ஆண் பாதிரியாரை ராம்பகான் (Rampahan) என்றும் பெண் பாதிரியாரை போபோலிசன் (Bobolizan) என்றும் அழைக்கிறார்கள். இருப்பினும் பெரும்பாலான ருங்குசுக்கள் இப்போது கிறிசுதவர்களாக மாறி விட்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "People & History". Official Website of the Sabah State Government. பார்க்கப்பட்ட நாள் 15 March 2022.
  2. Rita Lasimbang & Stella Moo-Tan, ed. (1997). "Patricia Regis & Jabatan Muzium dan Arkib Negeri Sabah". An Introduction to the Traditional Costumes of Sabah. Natural History Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 98-381-2013-8.
  3. Irene Benggon-Charuruks & Janette Padasian, ed. (1993). Cultures, customs, and traditions of Sabah, Malaysia: an introduction. Sabah Tourism Promotion Corporation. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 98-302-0000-0.
  4. Bucklee Bell. "Beads and Beadwork of the Rungus of Sabah (Part Four: Other Ornaments)". The Bead Site. பார்க்கப்பட்ட நாள் 2017-01-26.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருங்குசு&oldid=3639616" இலிருந்து மீள்விக்கப்பட்டது