உருசியாவின் ஆறாம் இவான்

அனைத்து உருசியாவின் பேரரசன்

ஆறாம் இவான் அந்தோனொவிச் (Ivan VI Antonovich of Russia (Ivan Antonovich; உருசியம்: Иван VI; Иван Антонович; ஆகத்து 23 [யூ.நா. ஆகத்து 12] 1740 – சூலை 16 [யூ.நா. சூலை 5] 1764), இரசியப் பேரரசின் அரசனாக 1740 ஆம் ஆண்டில் 2 மாதக் குழ்ந்தையாக இருகும் போது அறிவிக்கப்பட்டான். ஆனாலும் இவன் பேரரசனாக முடிசூடவில்லை. ஓராண்டுக்குள்ளேயே முதலாம் பீட்டரின் மகள் எலிசபெத்தினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டுச் சிறைப் பிடிக்கப்பட்டான். இவான் தனது இறுதிக் காலம் முழுவதும் சிறையிலேயே கழித்தான். 1764 ஆம் ஆண்டில் தனது 23வது அகவையில் இவனைச் சிறையில் இருந்து விடுவிக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியில் சிறைக் காவலாளிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டான்.

ஆறாம் இவான்
Ivan VI
Ivan VI of Russia with Y.Mengden by anonymous (18th c., Tretyakov gallery) detail 01.jpg
இரசியாவின் பேரரசரும் சர்வாதிகாரியும்
ஆட்சிக்காலம்28 அக்டோபர் 1740 - 6 டிசம்பர் 1741 (1 ஆண்டு 39 நாட்கள்)
முடிசூட்டுதல்28 அக்டோபர் 1740
(2 மாதங்கள் 5 நாட்கள்)
முன்னையவர்அன்னா
பின்னையவர்எலிசபெத்
பிறப்புஆகத்து 23, 1740(1740-08-23)
சென் பீட்டர்ஸ்பேர்க்
இறப்பு16 சூலை 1764(1764-07-16) (அகவை 23)
சிலிசெல்பேர்க்
புதைத்த இடம்
சிலிசெல்பேர்க்
பெயர்கள்
இவான் அண்டோனவிச்
மரபுரொமானொவ் மாளிகை
தந்தைபிரன்ஸ்விக்கின் இளவரசர் அந்தோனி உல்ரிக்
தாய்அன்னா லெப்பல்தோவ்னா