உருசிய நாட்டுப்பண்

நாட்டுப் பண்

உருசிய நாட்டுப்பண் (The State Anthem of the Russian Federation உருசிய மொழி: Госуда́рственный гимн Росси́йской Федера́ции, tr. Gosudarstvenný gimn Rossijskoj Federací; IPA: [ɡɐsʊdarˈstvʲɪnɨj ˈɡʲimn rɐˈsʲijskoj fʲɪdʲɪˈratsɨj]) என்பது உருசியாவின் நாட்டுப்பண் ஆகும். இது முதலில் சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் இசைகோர்வையாக்கப்பட்டு, வரிகள் சேர்க்கப்பட்டது. இதற்கு இசையமைத்தவர்.  அலெக்சாந்தர்  அலெக்ஸ் ஆன்ட்ரோவ் ஆவார். இதற்கான வரிகளை செர்ஜி மிக்கால் கோவ் மற்றும் கேப்ரியல் எல்-ரெஜிஸ்டான் ஆகியோர் இணைந்து எழுதினர். இவர்கள் எழுதிய பாடல்வரிகளை சேர்த்து  நாட்டுப்பண்ணானது உருவானது.[3] இந்த சோவியத் நாட்டுப்பண் 1944 முதல் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1953 இல் ஜோசப் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு, அவரால் கொண்டுவரப்பட்ட பாடலின் வரிகள் நீக்கப்பட்டன. 1956 இல் இசை வடிவம் மட்டும் பின்பற்றப்பட்டது. 1970 இல் கவிஞர் மிக்கால்கோவ், முந்தைய பாடலில் சில திருத்தங்களைச் செய்துகொடுத்தார். 1977 இல் இது ஏற்கப்பட்டது. அந்தப் பாடல் மீண்டும் நாட்டுப்பண்ணானது.

Gosudarstvenný Gimn Rossijskoj Federací

ஆங்கிலம்: State Anthem of the Russian Federation
உருசிய கூட்டமைப்பின் நாட்டுப்பண்
Государственный гимн Российской Федерации
Performance of the Hymn of the Russian Federation by the Presidential Orchestra and Kremlin Choir at the inauguration of President Dmitry Medvedev at The Kremlin on 7 May 2008. Seen here is then Prime Minister Vladimir Putin.


உருசிய கூட்டமைப்பு National கீதம்
இயற்றியவர்செர்கே மிகால்கோவ், 2000
இசைஅலெக்சாண்டர் அலெக்சான்ட்ரோவ், 1939
சேர்க்கப்பட்டதுதிசம்பர் 25, 2000 (இசை)[1]
திசம்பர் 30, 2000 (வரிகள்)[2]
இசை மாதிரி
National anthem of the Russian Federation (instrumental)

1991 இல் சோவியத் ஒன்றியத்தில் அரசியல், பொருளாதாரக் குழப்பங்கள் ஏற்பட்டன. இதனால் சோவியத் ஒன்றியம் போரிஸ் எல்ட்சின் காலத்தில் சிதறியது. மாநிலங்கள் எல்லாம் தனித்தனியே பிரிந்து போயின. உருசியா மட்டும் தனி நாடாக மாறியது. முன்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்த பெரும்பாலான மாநிலங்களுக்கு தனித்தனியே நாட்டுப்பண்கள் இருந்தன. சோவியத் ஒன்றியத்தில் உருசிய நாட்டுக்குமட்டும் தனியாக நாட்டுப்பண் இல்லாமல் இருந்தது. இதன் பிறகு மிகைல் க்லிங்கா என்பவரின் வரிகளற்ற இசைவடிவம் 1990 இல் நாட்டுப்பண்ணாக ஏற்கப்பட்டது.[4] ஆனால் 1993 இல்தான் உறுதிபடுத்தப்பட்டது.[5] இந்நிலையில் இந்த இசைக்கு ஏற்பப் பாடல் வரிகளை எழுதி அனுப்புமாறு பொதுமக்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் வந்தவை எதுவுமே சரியில்லை என அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனால் வரிகளே வேண்டாம் இசை மட்டுமே இருந்து விட்டுப் போகட்டும்' எனச் சொன்னார் அதிபர் விளாதிமிர் பூட்டின். இருந்தாலும் பாடல்வரிகள் இல்லாது நாட்டுப்பண் இசைக்கப்படுவது குறித்து உருசிய விளையாட்டு வீரர்கள் போன்றோர் அதிபர் புதினைச் சந்தித்து, பன்னாட்டு விளையாட்டு போட்டிகள் போன்ற சமயங்களின்போது சொற்கள் இல்லாத நாட்டுப்பண்ணை பாடுவது தங்களுக்கு உற்சாகம் தருவதாக இல்லை என்று குறைபட்டனர். உடனே அதை ஏற்றுக்கொண்ட அதிபர், நாட்டுப்பண் பாடலைத் தேர்வு செய்யுமாறு தேசிய கவுன்சிலில் கேட்டுக்கொண்டார். மீண்டும் போட்டி அறிவிக்கப்பட்டது. ஆறாயிரத்துக்கும் அதிகமாகப் பாடல்கள் வந்தன. அவற்றில் 20 பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு இசையமைக்கப்பட்டன. இறுதியில் மிகால்கோவ் எழுதி, அலெக்ஸான்ட்ரோவ் இசை அமைத்த பாடல் நாட்டுப்பண்ணானது. 2000 ஆம் ஆண்டு திசம்பர் 30, அன்று முறையாக உருசிய நாட்டுப்பண் பாடப்பட்டது.

அதிகாரப்பூர்வ வரிகள்

தொகு
உருசிய மொழி[2] தமிழ் ஒலிப்பெயர்ப்பு தமிழ் மொழிபெயர்பு[6]

Россия – священная наша держава,
Россия – любимая наша страна.
Могучая воля, великая слава –
Твоё достоянье на все времена!

Припев:
Славься, Отечество наше свободное,
Братских народов союз вековой,
Предками данная мудрость народная!
Славься, страна! Мы гордимся тобой!

От южных морей до полярного края
Раскинулись наши леса и поля.
Одна ты на свете! Одна ты такая –
Хранимая Богом родная земля!

Припев

Широкий простор для мечты и для жизни
Грядущие нам открывают года.
Нам силу даёт наша верность Отчизне.
Так было, так есть и так будет всегда!

Припев

ரஸ்ஸீயா - சிவியாசென்னையா நாஷா ஜெர்சாவா,
ரஸ்ஸீயா - லுபீமயா நாஷா ஸ்த்ரனா.
மகூச்சயா வோல்யா விலீக்கயா சிலவா;–
த்வோயோ தஸ்தயானியே நா வ்சியோ வ்ரேமினா!

பிரீபியெவ்:
ஸ்லாவ்சியா, அத்திச்செஸ்துவா நாஷெ சிவபோத்னயே,
பிராத்ஸ்கிஹ் நரோதவ் சயூஸ் வியெக்கவோய்,
பிரித்காமி தான்னயா நரோத்னயா!
சிலாவ்சியா, ஸ்த்ரனா! மீ கோரிம்சா தபோய்!

ஒட் யுஸ்னி மொரே தோ பாலியார்ன கோ யா
ரஸ்கிலிஸ் நஸி லேசா இ பொயா.
ஒட்ன டி நா ஸ்வதே ஒட்ன டி தகாயா –
க்ரனி மாயபோ கோம்ராட்னயா ஜெமிலா !

பிரீபியெவ்

ஷிரோகி ப்ரொஸ்டார் யா மெஷீட்டி இ லியா டிஸ்னி.
க்ரடூஷியே நம் ஒட்ரி வாயுத் கொடா.
நம் சிலூ டயாட் நஷாவர் னோஸ்த் ஒசீனே.
தக் பீலோ தக் யேஸ்தீ தக் புடெட் சேட்கா!

பிரீபியெவ்

உருசியா - நமது புனித தாய் நாடு. ,
உருசியா - நமது நேசத்துக்குரிய நாடு. .
வலிமையான மனவுறுதி, மாபெரும் மகிமை;–
இவை (யாவும்) எப்போதுக்குமான நமது பாரம்பரியம்!

அனைவரும்:
மகிமையோடு இரு - எமது சுதந்திர தந்தை நாடே,
தொன்மை வாய்ந்த சகோதர மக்களின் ஒற்றுமை. ,
முன்னோர்கள் அளித்த, மக்களின் மதி நுட்பம்!
மகிமையோடு இரு என் நாடே! உன்னை எண்ணிப் பெருமையுறுகிறோம்!

தென் கடல்களிலிருந்து துருவ நிலங்கள் வரை
எங்கள் வயல்களும் வளங்களும் விரயிருக்கின்றன.
உலகில் தனித்தன்மையுடன் நிற்கிறாய் - நீ மட்டுமாய்;–
இறைவனால் பாதுக்கப்பட்ட, பூர்வீக பூமி!

அனைவரும்

விரிந்த கனவு, அகன்ற வாழ்க்கை
வருங்காலத்தில் எங்களுக்காகத் திறக்கின்றன
தந்தை நாட்டின் மீதான பற்று எங்களுக்கு வலிமை சேர்க்கின்றது.
இப்படித்தான் - இருந்தது; இருக்கின்றது; இருக்கும்!

அனைவரும்

மேற்கோள்கள்

தொகு
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; anthemlaw என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 Указ Президента Российской Федерации от 30.12.2000 N 2110
  3. "Russia — National Anthem of the Russian Federation". NationalAnthems.me. Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 23 November 2011.
  4. "On the National Anthem of the Russian SFSR". Decree of the Supreme Soviet of the Russian SFSR. pravo.levonevsky.org. November 23, 1990.
  5. "On the National Anthem of the Russian Federation". Ukase of the President of the Russian Federation. infopravo.by.ru. December 11, 1993.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "நாட்டுக்கொரு பாட்டு - 9 : ஒரு வல்லரசு தேடிய கீதம்!". தி இந்து (தமிழ்). 8 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_நாட்டுப்பண்&oldid=3702730" இலிருந்து மீள்விக்கப்பட்டது