உருது மொழி பாதுகாப்பு இயக்கம்
உருது மொழி பாதுகாப்பு இயக்கம் (Save Urdu Movemen ) இந்தியா மற்றும் பாகித்தான் ஆகிய இரு நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநில அளவிலான அலகுகளால் குறிப்பிடப்படுகிறது. பாக்கித்தானில் உருது நாட்டின் தேசிய மொழியாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த இயக்கம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகளில் உருது கல்வியை பாதுகாக்க வேண்டும் என்று வாதிடுகிறது.
இந்தியா
தொகுஇயக்கமும் இந்திரா காந்தியும்
தொகுமுன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, உருது மொழி பாதுகாப்பு இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் நீண்ட கால மற்றும் பயனுள்ள தொடர்புகள் கொண்டிருந்தார். இயக்கத்தினர் இவரை அடிக்கடி அணுகினர். இந்தியாவில் உருது தொடர்பான சில குறைகளை நிவர்த்தி செய்ய முயன்றார்.
உருது பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாடுகள்
தொகுஇந்தியாவின் பல மாநிலங்களில் உருது மொழி பாரபட்சமாக நடத்தப்படுவதை இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் அலுவல் மொழியாக இருந்த போதிலும், உருது இப்போது அரசு அலுவலகங்களில் முற்றிலும் இல்லை என்பது போன்ற ஒரு தெளிவான உதாரணம் எடுத்துக்காட்டப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளாக உருது ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், உருது கற்பித்தல் தேக்க நிலையில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள உருது மொழி பாதுகாப்பு இயக்க மாநிலப் பிரிவின் பொதுச் செயலாளர் இர்சாத் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளன. [1]
பாக்கித்தான்
தொகுசிந்து அரசுடன் விரிசல்
தொகுஉருது பாதுகாப்பு இயக்க அமைப்பு குறிப்பாக சிந்துவில் சிக்கலான நடவடிக்கையை கொண்டிருந்தது, சிந்து அரசாங்கம் உருது மொழிக்கு பதிலாக சிந்தியை ஊக்குவிக்க முயன்றது. 11ஆம் வகுப்பில் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் உருது மொழியின் 100 மதிப்பெண் தாளைக் குறைத்து சிந்தியைக் கட்டாயப் பாடமாக ஊக்குவிக்கும் வகையில் சிந்தி மொழியை ஊக்குவிக்கும் திட்டம் சிந்து அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. உருது மொழி பாதுகாப்பு இயக்கம், பள்ளிகளில் மாணவர்களுக்கு உருது மற்றும் சிந்தி மொழியை அர்த்தமுள்ள முறையில் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. மாணவர்கள் அன்றாட வாழ்வில் மொழியையும் அதன் பயன்பாடுகளையும் கணிசமாகப் புரிந்துகொள்ளும் வகையில் கல்வித் திட்டம் வேண்டும் என்று கூறியது. இடைநிலை மட்டத்தில் மாணவர்களுக்கு சிந்தி அல்லது உருதுமொழியை திணிக்க அரசு முயற்சிக்கக் கூடாது போன்றவற்றை இயக்கம் வலியுறுத்தியது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Urdu, second official language, absent from offices". பார்க்கப்பட்ட நாள் 23 April 2014.
- ↑ "Home Newspaper Karachi KARACHI: Teachers oppose decision on language subject". Dawn Newspaper. பார்க்கப்பட்ட நாள் 23 April 2014.