உருத்திரபுரம் சிவன் கோயில்
உருத்திரபுரீஸ்வரம் ஆலயம் அல்லது பொதுவாக உருத்திரபுரம் சிவன் கோயில் என்பது இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில். கூழாவடிச் சந்தியிலிருந்து மேற்கே செல்லும் வீதி சிவன் கோவில் வீதியாகும். தற்போது அவ்வீதி நீவில் என்ற கிராமத்தினூடாகவே செல்கின்றது. ஆரம்பத்தில் அப்பாதையின் இருமருங்கும் அடர்ந்த காடாகவும் வண்டில் மாட்டுப் பாதையொன்றும்தான் இருந்தது. ஐம்பது அடி உயரத்திற்கும் மேற்பட்ட வீரமரம், பாலைமரம் மற்றும் பலவகை மரங்கள் சூழ்ந்த காட்டினூடாகவே அப்பாதையில் பயணிக்கவேண்டும். மந்திக் குரங்குகள் அப்பாதையில் காணப்படும்.
1950களில் அப்பிரதேசத்தில் செங்கற்களாலான இடிபாடு ஒன்று வேலாயுதசாமியால் கண்டறியப்பட்டது. பின்பு ஊர்ப்பெரியவர்களும் இணைந்து தோண்டிப்பார்த்து அவ்விடம் புராதன சிவன் கோவிலின் சிதைவுகள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. முதலில் வேலாயுதசாமியார் அப்பகுதியில் சிறு குடிசையொன்றில் உருவாக்கி மூலஸ்தானத்தில் வேல் மட்டுமேயிருந்த முருகன் ஆலயம் மட்டுமே அவரால் பராமரிக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்திலிருந்தும் பக்கதர்கள் வந்து சென்றனர். இங்குள்ள சிவலிங்கம் ஆவுடையார் பொறிறழக்கடவை ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். கோவிலுக்கருகிலுள்ள தாமரைப்பூக்கள் சூழ்ந்த குளம் கோவிலுக்கான சுற்றாடலை இயற்கையாகவே அமைந்துள்ளது.
இங்கு அம்பாளோடு விநாயகர் சனீஸ்வரன், வைரவர் ஆகிய மும்மூர்த்திகள் உளர், தினமும் மூன்றுகாலப்பூசை சிறப்பு நாட்களில் நடைபெறுகின்றது.
உசாத்துணை
தொகு- ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்