உருத்ர மதாப் ரே
இந்திய அரசியல்வாதி
உருத்ர மதாப் ரே (Rudra Madhab Ray) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தசுபல்லா தொகுதியில் இருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் இவர் உறுப்பினராக இருந்தார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கந்தமாள் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி பிச்சு சனதாதளத்திலிருந்து 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.[2] பின்னர் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். உருத்ரமதாப் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று இறந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Profile of Members". Government of India. பார்க்கப்பட்ட நாள் 16 March 2012.
- ↑ Nayak, Priyabrata. "Odisha BJD suspends Kandhamal MP Rudra Madhab Ray for anti-party activities". பார்க்கப்பட்ட நாள் 13 April 2014.
- ↑ "BJP leader and former MP Rudra Madhab Ray passes away". Business Standard India. Press Trust of India. 31 May 2016. http://www.business-standard.com/article/pti-stories/bjp-leader-and-former-mp-rudra-madhab-ray-passes-away-116053100807_1.html. பார்த்த நாள்: 31 May 2016.
.