உருமி தடுப்பணை 1
உருமி தடுப்பணை 1 (Urumi 1 Weir) என்பது இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தின் கூடரஞ்சி கிராமத்தில் பொயிலிங்கலபுழாவின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு சிறிய நீர் திசைதிருப்பல் அணையாகும்.[1] சிறிய நீர்மின் திட்டத்தில் மின் உற்பத்திக்காகக் கட்டப்பட்டது இந்த தடுப்பணை. சாலியார் ஆற்றின் துணை ஆறான பொயிலிங்கலபுழாவின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆழமான பகுதியிலிருந்து அணையின் உயரம் 5.6 மீட்டரும் அணையின் நீளம் 47 மீட்டரும் ஆகும்.
அணைக்கு அருகிலுள்ள உருமி நீர்வீழ்ச்சி நீர்மின் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இப்பகுதி மாறியுள்ளது.[2]
விவரக்குறிப்புகள்
தொகு- அமைவிடம்: 11 0 22 '51.85 "வ 76 0 3'41" கி
- அணையின் வகை: பைஞ்சுதை, ஈர்ப்பு
- ஊராட்சி : கூடரஞ்சி
- வகைப்பாடு: தடுப்பணை
- அதிகபட்ச நீர் மட்டம்: 212.1 மீ
- மாவட்டம்: கோழிக்கோடு
- முழு நீர்த்தேக்க நிலை: 212.1 மீ
- ஆற்றுப் படுகை: சாலியார்
- அணையில் செயல்பாடு: நீர் திசைதிருப்பல்
- ஆறு: பொயிலிங்ல்புழா
- ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 5. 6 மீ
- அணையிலிருந்து ஆற்றுக்கு நீர் விடுவிப்பு: பொயிலிங்ல்புழா
- நீளம் :47. 0 மீ
- நீர் வெளியேறும் வட்டம்: தாமரச்சேரி
- சுழல்காற்று: மேல்நிலைப் பிரிவு
- முகடு நிலை: 212.1 மீ
- திட்டத்தின் நோக்கம்: நீர் மின்சாரம்
- திட்டத்தின் நிறுவப்பட்ட திறன்: 3 × 1.25 (3.75 மெகாவாட்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala State Electricity Board Limited - Small Hydro Projects". www.kseb.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
- ↑ ഷാബാസ്, സഫീര്. "കേരള വിനോദസഞ്ചാര ഭൂപടത്തില് ഇടം നേടി ഉറുമി". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.