உருளைப்புழு

உருளைப்புழு
(நேமதோடா)
Nematodes
சோயாபீன் நீர்மப்பை உருளைப்புழுவும் முட்டையும் (உருளைப்புழுக்களில் ஒரு வகை)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
துணைத்திணை: Eumetazoa
தரப்படுத்தப்படாத: Bilateria
தொகுதி: நேமதோடா
Diesing, 1861
வகுப்புகள்
  • Chromadorea
  • Enoplea
வேறு பெயர்கள்

Nematoidea Rudolphi, 1808
Nematodes Burmeister, 1837
Nemates Cobb, 1919
Nemata Cobb, 1919

உருளைப்புழு (roundworm) என்பது நெமடோடா (phylum: nematoda) என்னும் விலங்கியல் தொகுதியைச் சார்ந்த உயிரினமாகும் [1][2].இந்த தொகுதியின் கீழ் வாழும் உயிரினங்கள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. உருளைப் புழுவினத்தை வேறுபடுத்திக் காண்பது மிகவும் கடினமான செயலாகும். இருப்பினும் 25000 வகையான உருளைப் புழுவினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன [3][4]. இவற்றில் பாதிக்கு மேற்பட்டவை ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த உயிரினமாகும். ஒட்டுமொத்தமாக நெமடோடு வகை உயிர்னங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டால் ஒரு மில்லியன் உருளைப்புழுவினங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது [5].

உருளைப்புழுக்கள் தட்டைப்புழுக்களைப் போல இல்லாமல், பூச்சி இனத்துடன் சேர்த்து தோலுரிக்கும் வகை உயிரினங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. உருளைப்புழுக்கள் நீளமான குழல் போன்ற உடல் அமைப்பினை கொண்டவை; இவற்றின் உடலில் உள்ள செரிக்கும் மண்டலம் குழாய் அல்லது குழல் வடிவானவையாகும். நீளமான உடலின் இரு முனைகளிலும் திறப்புகள் (துளைகள்) உண்டு.

வாழிடம் தொகு

உருளைப்புழுக்கள் நன்னீர் முதல் கடல்நீர் (உப்புநீர்) வரை, துருவப்பகுதிகள் முதல் வெப்பமண்டலப்பகுதிகள் வரை, உயரமான பகுதிகள் முதல் ஆழ்கடல் பகுதிகள் வரை சமவெளிகள், காடுகள், கடலோரப்பகுதிகள், பாலைவனங்கள் என எந்த வகையான வாழ் சூழலிலும் எளிமையாக வாழப் பழகிகொண்டவையாகும். அண்டார்டிக்கா போன்ற மனிதர்கள் வாழ முடியாத இடங்களில் கூட இவை வாழ்கின்றன. ஆழ் கடலில் காணப்படும் 90 விழுக்காடு உயிரினங்கள் உருளைப்புழு வகையை சார்ந்தவையாகும்.[6].சுருங்கச் சொல்வதென்றால் புவி மேலோட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இவை பரவிக் காணப்படுகின்றன[7].

மேலும். தென் ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்கங்களில் கிட்டத்தட்ட பூமியின் ஆழத்தில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலும் இவை காணப்படுவதாகக் கூறப்படுகிறது[8][9][10][11][12] எண்ணிக்கை அடிப்படையில் சதுர மீட்டருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனி இனமாகவும், பூமியில் உள்ள அனைத்து தனி விலங்குகளில் 80% அளவிற்கும் உருளைப்புழுவினங்கள் காணப்படுவதாக அறியப்படுகிறது. சதுர மீட்டருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனி இனமாகவும், பூமியில் உள்ள அனைத்து தனி விலங்குகளில் 80% அளவிற்கும் உருளைப்புழுவினங்கள் காணப்படுவதாக அறியப்படுகிறது. உருளைப்புழுவினங்களின் வாழ்க்கைச் சுழற்சிகளின் பன்முகத்தன்மையும், பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் இவற்றின் இருப்பும் சூழல் மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன [13]. ஒட்டுண்ணிகளாக இவை பெரும்பாலான தாவரங்களிலும், விலங்குகளிலும் (மனிதர்கள் உட்பட) நோய்காரணிகளாக வாழ்கின்றன [14]. சில நூற்புழுக்கள் கிரிப்டோபையோசிசு எனப்படும் நீள் உறக்கநிலையிலும் வாழ்கின்றன.

வரலாறு தொகு

1758 ஆம் ஆண்டில், லின்னேயசு சில நெமட்டோடு இனங்களை விவரித்தார். உதாரணம்: அசுகாரிசு பின்னர் வெர்மெசு எனப்படும் கணுக்காலிகள் தவிர்த்த ஏனைய பூச்சியினங்களையும் நெமட்டோடு இனத்தில் சேர்த்தார். (nêma, nematos, 'thread') என்ற பொருள் கொண்ட பண்டைய கிரேக்க νῆμα சொல்லில் இருந்து நெமடோய்டியா என்ற சொல் உருவானது[15]. பின்னர் இது நெமட்டோடுகள் என்றழைக்கப்பட்டு தொடர்ந்து நெமட்டோடா என்றானது. 1808 ஆம் ஆண்டில் காரல் ருடால்பி இதை விளக்கினார். 1837 இல் பர்மெய்சுடர் இதை ஒரு நெமட்டோடு குடும்பமாக கருதினார்.

உடற்கூறியல் தொகு

  • நெமடோடுகள் மெல்லிய புழுக்கள் ஆகும். இவை தோராயமாக 5 முதல் 100 மைக்ரோமீட்டர் தடிமனும், 0.1 மிமீ முதல் 2.5 மில்லிமீட்டர் நீளமும் கொண்டவையாக காணப்படுகின்றன [16].
  • மிகச்சிறிய நூற்புழுக்கள் நுண்ணோக்கி அளவுள்ளவையாகவும், சிலவகை உயிரினங்கள் 5 செ.மீ நீளம் வரையிலும், மற்றும் சில வகை உயிரினங்கள் ஒரு மீட்டர் நீளம் வரையில் கூட வளர்கின்றன. [17]:271.
  • இவற்றின் உடல் பெரும்பாலும் முகடுகள், வளையங்கள், முட்கள் அல்லது வேறுபட்ட கட்டமைப்புகளால் ஆக்கப்படுகிறது. [18].
  • ஓர் உருளைப்புழுவின் தலைப்பகுதி ஒப்பீட்டளவில் வேறுபட்டுள்ளது. மீதமுள்ள உடற்பகுதி இருபக்கச் சமச்சீர் நிலையில் இருக்கிறது. தலையானது ஆரச்சமச்சீருடன் உணர்ச்சி முள்ளரும்புகளைக் கொண்டுள்ளது. மேலும் பல இனங்களின் முன்முனையில் நுண்ணிய பல் போன்ற அமைப்புடன் கூடிய வாய் காணப்படுகிறது. இவ்வாய்ப்பாகம் மூன்று அல்லது ஆறு உதடுகளால் சூழப்பட்டுள்ளது. காடால் சுரப்பி பெரும்பாலும் இவற்றின் வால் முனையில் காணப்படுகிறது[19]
 
ஒரு ஆண் C. elegans நெமட்டோட்டின் உடலகக் கட்டமைப்பு
  • இருபால் உயிரியிலும் முன்முனைக்கு சிறிது பின்னால் வயிற்றுப் புறத்தின் மையத்தில் ஒரு கழிவு நீக்கத்துளை காணப்படுகிறது.
  • உடலானது மெல்லிய கியூட்டிகளால் ஆனது. துண்டுபடல் இல்லை.
  • தலையாக்கம் உண்டு. எனினும் தலை தெளிவற்றது.
  • போலி உடற்குழி (pseudocoel) உள்ளது. அதாவது மெய்யான உடற்குழி இல்லை. போலி உடற்குழி உணவுக்கால்வாய் அகவணிக்கும் உடற்சுவருக்கும் இடைப்பட்டதாக உள்ள பாய்மம் நிரம்பிய பகுதியாகும். இது உணவுக் கால்வாயூடாக உணவைத் தள்ளுவதிலும், நீர்நிலையியல் வன்கூடாகவும் தொழிற்படுகின்றது.
  • கொலாஜினால் ஆன புறத்தோல் காணப்படும்.
  • நீள்பக்க / நெடுங்கோட்டுத் தசைகள் மாத்திரம் நான்கு கட்டுக்களாக உடற்சுவருக்கு இணைக்கப்பட்ட வகையில் உள்ளன.
  • வாழ்க்கை வட்டத்தின் எந்தவொரு நிலையிலும் இவற்றில் அசையக்கூடிய பிசிர்கள் உருவாக்கப்படுவதில்லை. சில நரம்புக் கலங்களில் மட்டும் புலன் தொழிலைச் செய்வதற்காக பிசிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • நைட்ரசன் கழிவு உருளைப் புழுவினத்தின் உடல் சுவர் வழியாக அம்மோனியா வடிவில் வெளியேற்றப்படுகிறது, மேலும் இதற்காக எந்தவிதமான குறிப்பிட்ட உறுப்புகளும் தொடர்புபடுத்தப்படவில்லை. ஆயினும், சவ்வூடுபரவலை முறைப்படுத்த பராமரிக்கப்படும் உப்பு வெளியேற்றும் கட்டமைப்பு பொதுவாக மிகவும் சிக்கலானதாக இருக்கிறது [20].
  • இவற்றுக்கு வயிற்றுப்பகுதி இல்லை, குடலின் பிரதான நீளத்தை உருவாக்கும் ஒரு தசை தொண்டைப் பகுதியை குடலுடன் நேரடியாக இணைக்கிறது. இதுவே நொதிகளை உற்பத்தி செய்யவும், செரிக்கப்பட்ட ஊட்டச்சத்துகளை ஈர்க்கவும் பயன்படுகிறது. குடலின் கடைசி பகுதி மலக்குடலில் முடிவடைகிறது. செரிமான அமைப்பு மூலம் உணவு நகர்தல் உடல் இயக்கங்களின் விளைவாகும்.
  • நரம்புத் தொகுதி: இருபக்கச் சமச்சீர் விலங்குகளின் உடற்சுவற்றின் மீது நான்கு நீண்ட கோடுகள் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை செல்கின்றன. இந்த நான்கு திண்ம நரம்புகளும் நாண்கள் தொண்டையைச் சூழவுள்ள நரம்பு வளையத்திலிருந்து முதுகுப்புற, வயிற்றுப்புற, பக்கப்புறங்களில் முழு உடலின் நீளத்துக்கும் செல்லும். ஒரு கோடு மைய முதுகெலும்புப் பகுதியாகும். ஒன்று நடு வயிற்றுப் பகுதியாகவும், மற்றவை இரண்டும் பக்கத்திற்கு ஒன்றாகவும் காணப்படுகின்றன முதுகுப் புற நரம்பு நாண் அசைவுகளைக் கட்டுப்படுத்தவும், பக்கப்புற நரம்பு நாண் புலன் தேவைக்காகவும், வயிற்றுப்புற நரம்பு நாண் இரண்டு வகைக் கட்டுப்ப்பாட்டுக்காகவும் தொழிற்படுகின்றன. நரம்பு வளையத்திலிருந்து முற்பக்கமாக தலையிலுள்ள புலனங்கங்களுக்குப் பல சிறிய நரம்பு நாண்களும் செல்லும். நரம்புத் தொகுதியில் பல நரம்புத் திரட்டுக்களும் காணப்படுகின்றன. உடலில் பல தொடுகை வாங்கிகளும், இரசாயன உணரிகளும், சிம்பிகளும் (papillae), சிலவற்றில் கட்புள்ளிகளும் உள்ளன. இவை கணத்தாக்கங்களை மூளையாகச் செயற்படும் தொண்டைச்சுற்று நரம்பு வளையத்துக்கு அனுப்புகின்றன.
  • சமிபாட்டுத் தொகுதி: வாய், குதம் உள்ள முழுமையான உணவுக் கால்வாய் நெமற்றோட்டுக்களில் உள்ளது. உணவை உறிஞ்சும் ஆற்றலுள்ள தொண்டையும், வாயில் புறத்தோலும் பற்கள் போன்ற விசேட அமைப்புக்களும் காணப்படலாம். இரைப்பை இருப்பதில்லை. தொண்டையிலிருந்து உடலின் முழு நீளம் வரை சென்று குதத்தில் முடிவடையும் குடலே இத்தொகுதியின் பிரதான கட்டமைப்பாகும். இக்குடலில் தசைகள் இருப்பதில்லை.
  • கழிவகற்றல் எளிய கழித்தற் கான்கள் மூலம் நிகழும்.
  • பருமன்: அனேகமானவற்றின் நீளம் 0.1-2.5 mm. எனினும் சுயாதீன வாழிகளில் உயர்ந்தபட்சமாக 5cm உம், ஒட்டுண்ணிகளில் மீற்றர்களில் உயர்ந்தபட்ச நீளம் உள்ளது. அனேகமானவற்றின் தடிப்பு 5 - 100 µm வரையாகும்.

இனப்பெருக்கம் தொகு

புறத்தோற்றத்தில் ஆண் பெண் பால் வேறுபாடுகள் நன்கு காணப்படுகின்றன. இவை தெளிவான இலிங்க ஈருருவத் தோற்றத்தைக் (sexual dimorphism) காண்பிக்கின்றன. பெண்புழு ஆண்புழுவை விட அளவில் பெரியதாகும். பெண்புழுவின் பின்முனை நேராகவும் ஆண்புழுவின் பின்முனை கொக்கி போன்று வளைந்தும் காணப்படும். பெண்புழுவின் பின்முனைக்குச் சற்று முன்னதாக கீழ்புறத்தில் மலப்புழை அமைந்துள்ளது. ஆண்புழுவில் இத்துளை பொதுக் கழிவறைத்துளையாக அல்லது குளோயகல் துளையாகச் செயல்படுகிறது. பெண் உருளைப்புழுவில் சூலகம், சூலகக் கான், கருப்பை ஆகிய பகுதிகளும், ஆணில் விதையும், விதைக் கானும் உள்ளன. நெமட்டோடுகளில் அகக் கருக்கட்டலே நிகழ்கின்றது. இதற்காக ஆண் நெமட்டோடுகளில் புணர்ச்சியங்கம் காணப்படும். இவற்றின் விந்துக்களில் சவுக்குமுளையோ, பிசிரோ இருப்பதில்லை. அமீபாப் போலி வடிவமான விந்துக்களே உருவாக்கப்படுகின்றன. அகக் கருக்கட்டலின் பின்னர் முளையமுள்ள கருக்கட்டப்பட்ட முட்டைகள் இடப்படும், இவற்றிலிருந்து சிறிய நெமட்டோடுக்கள் உருவாகின்றன. நெமட்டோடுகளில் குடம்பி நிலைகள் சிலவற்றிலேயே உண்டு. சில ஒட்டுண்ணிகள் ஈரிலிங்கத்துக்குரியனவாக உள்ளன.

வாழ்க்கைச் சுழற்சி தொகு

ஆண் மற்றும் பெண் உருளைப்புழுக்களின் இனச்சேர்க்கைக்குப் பின்னர் பெண் புழு இலட்சத்திற்கு மேற்பட்ட முட்டைகளை இடுகிறது. வெளியேற்றப்படும் முட்டைகள் சில நாட்களுக்குப் பின்னர் சிறிய இளம் உயிரி முட்டைக்குள் வளர்ச்சியடைகிறது. கரு வளர்ந்த முட்டைகள் தடித்த ஓட்டுடன் எதிர்ப்புத்தன்மை மிகுந்த முட்டைகளாக உள்ளன. அசுத்தமான நீர் மற்றும் உணவின் வழியாக உடலுக்குள் செல்லும் கருவளர்ந்த முட்டையிலிருந்து இளம் உயிரி பொரிந்து வெளியே வருகிறது. பின்னர் படிப்படியாக ஒன்று, இரண்டு, மூன்று மற்ரும் நான்கு முறை தோலுரிதல் நிகழ்ந்து முதிர்ந்த உருளைப்புழு தோன்றுகிறது.

முக்கிய ஒட்டுண்ணி நெமட்டோடுகள் தொகு

  • கொக்கிப்புழு
  • பைலேரியாப் புழு- யானைக்கால் நோய்
  • என்டரோபையசு
  • டிரைகுரிசு டிரைச்சுரா
  • அசுகாரிசுː அசுகாரிசு புழுவினால் ஏற்படும் தொற்று அசுகாரியாசிசு எனப்படுகின்றது. பசியின்மை, குடல்வலி, செரியாமை போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். இப்புழுக்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூக்கமின்மை உண்டாகும். குடல்வால் பகுதி இதனால் பாதிக்கப்பட்டு குடல்வால் நோய் உண்டாகிறது. முதிர்புழுக்கள் குடலில் அதிக அளவு காணப்பட்டால், அவைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து குடல் வழியை தடை செய்கின்றன. இதனால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. அறுவைச் சிகிச்சையின் மூலம் மட்டுமே இந்த நிலையிலிருந்து விடுபட முடியும்.

விண்வெளி ஆய்வு தொகு

2003ஆம் ஆண்டு விண்வெளி விண்கலம் கொலம்பியா எஸ்.டி.எஸ் -107இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியான உருளைப்புழுக்கள் (சி. எலிகன்சு) பூமிக்கு விண்வெளியிலிருந்து மறு நுழைவாக வந்தவை உயிருடன் இருந்தன. பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட பாதுகாப்பற்ற வளிமண்டல வம்சாவளியைத் தக்கவைத்த முதல் அறியப்பட்ட உயிரி இது என்று நம்பப்படுகிறது.[21][22]

மேற்கோள்கள் தொகு

  1. "Classification of Animal Parasites". Archived from the original on 2017-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-29.
  2. https://cid.oxfordjournals.org/content/29/4/734.full.pdf
  3. Hodda, M (2011). "Phylum Nematoda Cobb, 1932. In: Zhang, Z.-Q. (Ed.) Animal biodiversity: An outline of higher-level classification and survey of taxonomic richness". Zootaxa 3148: 63–95. 
  4. Zhang, Z (2013). "Animal biodiversity: An update of classification and diversity in 2013. In: Zhang, Z.-Q. (Ed.) Animal Biodiversity: An Outline of Higher-level Classification and Survey of Taxonomic Richness (Addenda 2013)". Zootaxa 3703 (1): 5–11. doi:10.11646/zootaxa.3703.1.3. 
  5. Lambshead PJD (1993). "Recent developments in marine benthic biodiversity research". Oceanis 19 (6): 5–24. 
  6. "Exponential decline of deep-sea ecosystem functioning linked to benthic biodiversity loss". Curr. Biol. 18 (1): 1–8. January 2008. doi:10.1016/j.cub.2007.11.056. பப்மெட்:18164201. Lay summary – EurekAlert!. 
  7. "Nematoda from the terrestrial deep subsurface of South Africa". Nature 474 (7349): 79–82. June 2011. doi:10.1038/nature09974. பப்மெட்:21637257. 
  8. Lemonick MD (2011-06-08). "Could 'worms from Hell' mean there's life in space?". Time இம் மூலத்தில் இருந்து 2011-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110610100919/http://www.time.com/time/health/article/0,8599,2076281,00.html. பார்த்த நாள்: 2011-06-08. 
  9. Bhanoo SN (2011-06-01). "Nematode found in mine is first subsurface multicellular organism". The New York Times. https://www.nytimes.com/2011/06/07/science/07obworm.html?_r=1&ref=southafrica. பார்த்த நாள்: 2011-06-13. 
  10. "Gold mine". Nature 474 (7349): 6. June 2011. doi:10.1038/474006b. 
  11. Drake N (2011-06-01). "Subterranean worms from hell: Nature News". Nature News. doi:10.1038/news.2011.342. பார்க்கப்பட்ட நாள் 2011-06-13.
  12. "Nematoda from the terrestrial deep subsurface of South Africa". Nature 474 (7349): 79–82. 2011-06-02. doi:10.1038/nature09974. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:21637257. 
  13. Platt HM (1994). "foreword". The phylogenetic systematics of freeliving nematodes. London: The Ray Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-903874-22-9. 
  14. Hsueh YP, Leighton DHW, Sternberg PW. (2014). Nematode Communication. In: Witzany G (ed). Biocommunication of Animals. Springer, 383-407. ISBN 978-94-007-7413-1.
  15. Chitwood BG (1957). "The English word "Nema" Revised". Systematic Zoology in Nematology Newsletter 4 (45): 1619. doi:10.2307/sysbio/6.4.184. http://plpnemweb.ucdavis.edu/Nemaplex/General/Phylumname.htm. பார்த்த நாள்: 2017-05-29. 
  16. Nyle C. Brady & Ray R. Weil (2009). Elements of the Nature and Properties of Soils (3rd Edition). Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780135014332. 
  17. Invertebrate Zoology: A Functional Evolutionary Approach (7th ). Belmont, California: Brooks/Cole. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-03-025982-1. https://archive.org/details/isbn_9780030259821. 
  18. An Introduction to Nematodes: General Nematology. Sofia, Bulgaria: Pensoft. 2000. பக். 75–76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-954-642-087-9. https://archive.org/details/introductiontone0000weis. 
  19. Barnes RG (1980). Invertebrate zoology. Philadelphia: Sanders College. ISBN 0-03-056747-5.
  20. Barnes RG (1980). Invertebrate zoology. Philadelphia: Sanders College. ISBN 0-03-056747-5.
  21. "Columbia Survivors". Astrobiology Magazine. Jan 1, 2006. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் January 12, 2016.
  22. Szewczyk, Nathaniel J.; Mancinelli, Rocco L.; McLamb, William; Reed, David; Blumberg, Baruch S.; Conley, Catharine A. (December 2005). "Caenorhabditis elegans Survives Atmospheric Breakup of STS–107, Space Shuttle Columbia". Astrobiology 5 (6): 690–705. doi:10.1089/ast.2005.5.690. பப்மெட்:16379525. Bibcode: 2005AsBio...5..690S. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளைப்புழு&oldid=3849176" இலிருந்து மீள்விக்கப்பட்டது