உரூத்திரைட்டு
சல்போவுப்புக் கனிமம்
உரூத்திரைட்டு (Routhierite) என்பது Tl(Cu,Ag)(Hg,Zn)2(As,Sb)2S6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய தாலியம் சல்போசால்ட்டு கனிமமாகும்.
உரூத்திரைட்டு Routhierite | |
---|---|
உரூத்திரைட்டு படிகங்கள் (சிவப்பு). | |
பொதுவானாவை | |
வகை | சல்போசால்ட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Tl(Cu,Ag)(Hg,Zn)2(As,Sb)2S6 |
இனங்காணல் | |
நிறம் | ஊதா சிவப்பு |
படிக இயல்பு | வடிவமற்ற மணிகள், படிக உருவமற்ற மணிகள் மற்றும் நரம்புகள் |
படிக அமைப்பு | நாற்கோணம் |
இரட்டைப் படிகமுறல் | நுண்ணிய பல்செயற்கை இரட்டை |
பிளப்பு | 2; இரண்டு செங்குத்து பிளவுகள் |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5 |
மிளிர்வு | உலோகம் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி புகாது |
அடர்த்தி | 5.83 |
பலதிசை வண்ணப்படிகமை | பலவீனம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
முதன்முதலில் 1974 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஆல்ப்சு மலைத் தொடரிலுள்ள இயாசு ரூக்சு படிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.[2] பிரெஞ்சு புவியியலாளர் பியர் உரூத்தியரை (1916-2008) நினைவு கூறும் வகையில் கனிமத்திற்கு உரூத்திரைட்டு எனப் பெயரிடப்பட்டது.[4] உருசியாவின் வடக்கு யூரல் மலைகள் மற்றும் கனடாவின் ஒன்டாரியோவின் தண்டர் பே மாவட்டம் ஆகிய இடங்களிலும் உரூத்திரைட்டு இருப்பது பதிவாகியுள்ளது.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் உரூத்திரைட்டு கனிமத்தை Rtr[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 "Routhierite". mindat.org the mineral database.
- ↑ Routhierite Mineral Data
- ↑ Biography in french (archived)
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- "Routhierite". museum of Paris Ecole des mines. Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2023-09-30.
- mineralatlas.com