உரூமி நாத்

இந்திய அரசியல்வாதி

உரூமி நாத் (Rumi Nath) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அசாம் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போர்கோலா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகச் சட்டசபைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 2011ல் மீண்டும் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] இவர் மருத்துவர் ஆவார். பான்-இந்திய வாகனத் திருட்டு மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் இவர் ஏப்ரல் 2015-ல் கவுகாத்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[2] அக்டோபர் 2020-ல், இவரின் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

மே 2012-ல், உரூமி நாத் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகக் கூறப்படுகிறது.[4] இவர் தனது பெயரை ரபேயா சுல்தானா என்று மாற்றிக்கொண்டு தனது நீண்டகால நண்பரை மணந்தார்.[5] இத்திருமண உறவு மூலம் இவருக்கு ஒரு மகள் உள்ளார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Bigamist Cong MLA,second husband beaten up by mob". The Indian Express (in ஆங்கிலம்). 2012-06-30. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  2. "Auto theft racket: Congress MLA Rumi Nath arrested - The Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2015-10-29.
  3. Hemanta Kumar Nath (October 9, 2020). "Assam: Congress expels MLA Rajdeep Gowala, ex-MLA Rumi Nath for 6 years for 'anti-party' activities". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  4. "Congress MLA Rumi Nath: From one controversy to another". The Indian Express (in ஆங்கிலம்). 2015-04-16. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
  5. Desk, India TV News (2012-05-28). "Assam MLA Rumi Nath leaves husband, converts to Islam to marry Facebook friend | India News – India TV". www.indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  6. "Congress MLA Rumi Nath: From one controversy to another". The Indian Express. 2015-04-16. பார்க்கப்பட்ட நாள் 2015-10-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூமி_நாத்&oldid=3692688" இலிருந்து மீள்விக்கப்பட்டது