உரோபெர்த்தா வைல்
முனைவர் உரோபெர்த்தா அன்னி பாபி வைல் (Dr Roberta Anne 'Bobbie' Vaile) (25 ஜூன் 1959 – 13 நவம்பர் 1996) ஓர் ஆத்திரேலிய வானியற்பியலாளர் ஆவார். இவர் மெக்கார்த்தரில் உள்ள மேற்கு சிட்னி பலகலைக்க்ழகத்தில் வணிகம், தொழில்நுட்பத் துறையில் முதுநிலை இயற்பியல் விரிவுரையாளராக உள்ளார். இவர் சேதி சார்ந்த போனிக்சு திட்ட்த்தில் ஈடுபட்டுள்ளார். இவர் அப்பல்கலைக்கழகத்தில் 1995 இல் ஆத்திரேலிய சேதி மையத்தை உருவாக்கிப் பெருந்தாக்கம் செலுத்தியுள்ளார். இவர் மூளைப்புற்றுடன் ஏழாண்டுகள் போராடி இறந்துவிட்டார்.[1]
இவர் நியூசவுத் வேல்சில் உள்ள ஜூனேவில் பிறந்தார். இவர் தன் இளம் அறிவியல் பட்டத்தை ஆத்திரேலிய நியூகேசில் பலகலைக்கழகதில் பயின்று பெற்றார். தன் முனைவர் பட்டத்தை நியூசவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் 1989 இல் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு "தென்முனை ஒளிவட்ட வளாகம்" என்பதாகும். அறிவியல் பயிற்றுவிக்க இவர் ஓர் எளிய முறைக்காக இவருக்கு ஆத்திரேலிய அறிவியல் பரப்புரையாளர் விருதாகிய' "போற்றப்படாத ஆத்திரேலிய அறிவியல் வீராங்கனை" எனும் விருது வழங்கப்பட்டது.
வெளியிட்ட பிறவற்றில் பின்வரும் கட்டுரையும் உள்ளடங்கும்:
- Seth Shostak, Ron Ekers, Roberta Vaile, 1996. A Search for Artificial Signals from the Small Magellanic Cloud The Astronomical Journal 112, 164-166.
மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் தோட்டம் ஒன்று, 1998 இல் இவரது நினைவாகப் பாபித் தோட்டம் எனப் பெயர் இடப்பட்டது. நியூசவுத் வேல்சில் உள்ள காம்தேனில் இவரது நினைவாக( 34°03′33″S 150°42′42″E / 34.05917°S 150.71167°E) ஓர் இயற்கைக்காப்பிடம்/பூங்கா பெயர் இடப்பட்டு உள்ளது. ஆத்திரேலிய வானியலாளராகிய இராபர்ட் மெக்நாட் கண்டுபிடித்த 6708 பாபிவைல் எனும் முதன்மைப்பட்டை இருமச் சிறுகோள் 1989இல் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[1]
இந்தப் பெயரீடு 1997 ஏப்பிரல் 22 இல் வெளியிடப்பட்டது(சி.கோ.சு. 29671).[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (6708) Bobbievaile. Springer Berlin Heidelberg. p. 551. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.
- ↑ "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.
வெளி இணைப்புகள்
தொகு- [1] - Bobbie Vaile Reserve
- [2] - Bioastronomy News, Fall 1993, Vol 4
- [3] - Bright Sparcs biography
- [4] - SETI articles listing
- [5] - SETI Australia Centre
- [6] - SETI Australia Centre - Bobbie Vaile Page
- [7] - Women in Astronomy reference
- [8] - Planetary Society, Australian Volunteers Page
- [9] - Positive Consequences of SETI Before Detection paper
- [10] - QUICKSMART - Introductory Physics
- [11] - ASC Unsung Hero Bobbie Vaile page
- [12] - SETI News article
- [13] - Smithsonian/NASA ADS abstract of "The Corona Australis Complex" paper
- [14] பரணிடப்பட்டது 2018-03-20 at the வந்தவழி இயந்திரம் - Tributes