உர்ஃபி ஜாவெத்

இந்திய நடிகை

உர்ஃபி ஜாவெத் (Urfi Javed) (அக்டோபர் 15, 1997) ஓர் இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாக அறியப்படுகிறவர். இந்தி திரையுலகில் 2016-ல் இந்தி நாடகத் தொடர் ஒன்றில் அறிமுகமான இவர், சந்திர நந்தினி தொடரின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக சில நாடகத் தொடர்களில் நடித்து வந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு இந்தி ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான, ஊட் நிறுவனம் தயாரித்த பிக் பாஸ்-1 ல் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். [1]

உர்ஃபி ஜாவெத்
2021 ல் ஜாவெத்
பிறப்புஉர்ஃபி ஜாவெத்
15 அக்டோபர் 1997 (1997-10-15) (அகவை 27)
லக்னோ, உத்திரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்வெகுஜன தகவல் தொடர்பியல் (Mass Communication), அமித்தி பல்கலைக்கழகம், நொய்டா
பணி
  • ஆடை வடிவமைப்பாளர்
  • தொலைக்காட்சி நடிகை
  • சமூகவலைதள மக்கள் தொடர்பு
செயற்பாட்டுக்
காலம்
2016–தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் லக்னோவின் சிட்டி மாண்டிசோரி பள்ளியில் தனது கல்வியை முடித்தார் மற்றும் லக்னோவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் வெகுஜன தகவல் தொடர்பு (mass communication) பட்டப்படிப்பை முடித்தார். நடிகையாக பணியாற்றுவதற்கு முன்பு, டெல்லியில் உதவி ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார்.[2]

தொழில்

தொகு
 
2021 ல் ஜாவெத்

ஜாவெத் 2016 முதல் 2017 வரை ஒலிபரப்பான, சோனி தொலைக்காட்சியின் படே பாய்யா கி துல்ஹனியா என்ற நகைச்சுவை நாடகத் தொடரில் அவ்னி பந்த் என்ற கதாப்பாத்திரத்தில் தோன்றினார்.[3] இவர் ஸ்டார் ப்ளஸின் சந்திர நந்தினியில் சாயாவாக நடித்தார். பின்னர், அவர் ஸ்டார் ப்ளஸின் மெரி துர்காவில் ஆர்த்தியாக நடித்தார்.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உர்ஃபி_ஜாவெத்&oldid=3944287" இலிருந்து மீள்விக்கப்பட்டது