உர மரங்கள் (Fertilizer tree) மண்வள மேம்பாட்டிற்காக வேளாண் காடுகளில் சாகுபடி செய்யப்படும் மரங்கள் ஆகும். வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தி பயிர்களுக்கு கொடுக்கிறது. மண்ணிற்கு அடியில் எளிதில் கிடைக்கமுடியாத சத்துக்களை மண்ணின் மேற்பரப்பிற்கு கிடைக்கும் வண்ணம் செய்கின்றன. மேலும் உரமரங்கள், உர அரிமானம், மண் அரிமானம் அதனால் ஏற்படும் மண் சேதங்களைத் தடுத்து பயிர்களுக்கு கிடைக்கும் நீர் மேம்பாட்டிற்கு உதவுகிறது. உதாரணமாக உரமரங்களாக செஸ்பேனியா, கிளரிசிடியா, தெப்ரோசியா, பைதர்பியா அல்பிடா, லுசர்ன் அல்லது தகாசாஸ்தே (சைட்டிசஸ் புரோலிபெரஸ்) என்ற உரமரம் ஒரு ஹெக்டேருக்கு 575 கிலோ தழைச்சத்தை ஒரு வருடத்திற்கு நிலைநிறுத்தக்கூடிய தன்மை கொண்டது. இது மேலும் வருடத்திற்கு 800 மி.லி மழையளவு கொண்ட பகுதிகளில் மக்காச்சோளத்தில் மகசூலை வருடத்திற்கு ஒரு டன்/ஹெக்டேர் என்பதில் இருந்து 10 டன்/ஹெக்டேர் வரை அதிகரிக்கக் கூடியத்தன்மை வாய்ந்தது.

ஆப்பிரிக்காவில் உரமரத்தின் பயன்பாடு

தொகு

பைதர்பியா அல்பிடா என்ற உரமரம், ஆப்பிரிக்காவின் மாளவி மற்றும் ஜாம்பியா பகுதிகளில் மக்காச்சோளத்தின் மகசூலை இருமடங்கு மற்றும் மும்மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. பசுமை வேளாண்மையில் உரமரங்கள் உணவுப்பாதுகாப்பை அதிகரிக்கின்றது. ஜாம்பியா பகுதியில் 3 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவை விட நைஜர் பகுதியில் 4.8 மில்லியன் ஹெக்டேர் பரப்பு உரமரங்களால் பயனாகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Langford, Kate (October 14, 2011). "New Study Finds 400,000 Farmers in Southern Africa Using ‘Fertilizer Trees’ to Dramatically Improve Food Security". World Agroforestry Centre. Archived from the original on March 9, 2014. Retrieved August 29, 2012.
  2. http://www.voanews.com/english/news/africa/a-13-2007-05-22-voa72.html
  3. http://www.worldagroforestry.org/evergreen_agriculture பரணிடப்பட்டது 2011-05-15 at the வந்தவழி இயந்திரம்
  4. Marshall, Jessica (August 8, 2012). "African tree acts as 'fertilizer factory' for crops". MSNBC. Retrieved August 29, 2012.
  5. Langford, Kate (August 31, 2011). "Surviving drought through agroforestry". World Agroforestry Centre. Retrieved August 29, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உர_மரங்கள்&oldid=3916249" இலிருந்து மீள்விக்கப்பட்டது