உறங்குநிலையில் திடுக்கம்
உறங்குநிலையில் திடுக்கம் (hypnic jerk) என்பது பலருக்கும் உறங்கச் செல்லும்போது அரைத்தூக்கத்தில் அவ்வப்போது நிகழும் ஒரு விளைவாகும். ஆழ்நிலைத்தூக்கத்துக்குச் செல்லும் முன்னர் உடல் தசைகள் தளர்வதால் ஏற்படும் இழுப்பினால் சுண்டித் திடுக்கிடுகிறது.[1] இத்தகைய அதிர்ப்பு நிகழும்போது பல வேளைகளில் விழுவது போன்ற உணர்வோ "'கனவோ" ஏற்பட்டு விழித்துக் கொள்வர்.[2] ஒழுங்கான தூக்க நேரங்களைப் பின்பற்றாதவர்களிடையே இது கூடுதலாக நிகழ்கிறது.[3]
ஆறு
தொகுபொதுவாகவே உறங்கச் செல்லும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களான மூச்சு குறைவது, உடல் வெப்பம் தணிவது போலவேதான் இவ்விளைவும் ஏற்படுவதாகக் கருதுகின்றனர். சில அறிஞர்கள் உறக்கத்துக்குச் செல்லும்போது தசைகள் திடீரென இறுக்கம் தளர்வதால் மூளைக்கு விழுவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது என்றும் விழுவதை விரைந்து தவிர்க்க முனையும்போது சுண்டி இழுப்பதாகவும் கருதுகின்றனர். இத்தகைய நிகழ்வுகளின்போது விழுவதைப் போலக் கனாக் காண்பதையும் சுட்டுகின்றனர். (ஆழ்நிலைத்தூக்கத்துக்கு முன்னர் வருவதால் அவை மெய்யான கனவுகள் இல்லை என நம்பப்படுகிறது.) உறக்கம் தொடர்பான மருத்துவத்துக்கான அமெரிக்கக் கழகத்தின்படி கலக்கம், கஃவீன், மன அழுத்தம், மாலைப்பொழுதில் கடுமையான அலுப்பூட்டும் பணிகளைச் செய்வது, சில மருந்துகள், போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் போன்றவற்றால் உறங்குநிலையில் திடுக்கிடுதல் மிகுதியாகக் கூடும்.[4]
விளைவு
தொகுமக்களில் 70 விழுக்காட்டினருக்கு இது சில வேளைகளில் ஏற்படுவதாக மாயோ மருத்துவமனையின் ஆய்வுகளில் அறிந்துள்ளனர். சிறுவயதில் கூடுதலாக ஏற்படுகிறது.[5] ஆனால், சிலர் அடிக்கடி திடுக்கிட்டு விழித்துக் கொள்ளுவதால் அச்சமும் தூக்கமின்மையும் ஏற்படுகிறது. அதனால் இவ்வகையான திடுக்கம் மேலும் அடிக்கடி நிகழும் வாய்ப்பும் உண்டாகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Medical College of Wisconsin, Sleep: A Dynamic Activity பரணிடப்பட்டது 2008-06-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ National Institute of Neurological Disorders and Stroke, Understanding sleep பரணிடப்பட்டது 2012-06-18 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Basics of Sleep Behavior: NREM and REM Sleep
- ↑ 4.0 4.1 A Case of the Jerks பரணிடப்பட்டது 2012-03-25 at Archive.today by Kaitlyn Syring, University Daily Kansan, February 28, 2008
- ↑ Askenasy, J.J. M. "Sleep Disturbances in Parkinsonism." Journal of Neural Transmission (2003): 125-50. Www.springlink.com. Springer-Verlag. Web. <http://www.springerlink.com/content/v9p64f0guwn9urhd/fulltext.pdf[தொடர்பிழந்த இணைப்பு]>.