உறவு
வாழ்க்கையின் ஒரு பகுதிதான் உறவு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுகிடையேயான தொடர்பை இணைப்பை உறவு எனலாம். பெற்றோர் பிள்ளை உறவு, சகோதர உறவு, குடும்ப உறவுகள் மரபணுத் தொடர்புடையவை. கணவன்- மனைவி அல்லது ஓரினச்சேர்க்கை உறவுக்கு நெருங்கிய மரபணுத் தொடர்பு அவசியமில்லை, ஆனால் சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. பொதுவாக நட்புறவு இரத்த, சட்ட தொடர்பற்ற மனிதர்களுக்கிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை, ஒத்துழைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட ஒர் உறவைக் குறிக்கிறது. மனிதருக்கிடையே தொழில்முறை உறவுகளும் உண்டு. உறவு மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல், வேறு மிருகங்களுக்கிடையேயும் உண்டு. சிலர் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கிடையேயான தமது உறவை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். சிலர் இயற்கைக்கும் மனிதருக்கும் உள்ள உறவைப் மனிதருக்கிடையேயான உறவுடன் ஒத்து நோக்குவதுமுண்டு.[1][2][3]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ye, Jinhui; Ye, Xiaoting (4 November 2020). "Adolescents' interpersonal relationships, self-consistency, and congruence: Life meaning as a mediator". Social Behavior and Personality 48 (11): 1–11. doi:10.2224/sbp.9428.
- ↑ Molm, Linda D.; Schaefer, David R.; Collett, Jessica L. (2007). "The Value of Reciprocity". Social Psychology Quarterly 70 (2): 199–217. doi:10.1177/019027250707000208.
- ↑ Berscheid, Ellen (1999). "The greening of relationship science.". American Psychologist 54 (4): 260–266. doi:10.1037/0003-066X.54.4.260. பப்மெட்:10217995.