உற்பத்தித் தகவல் மென்பொருள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உற்பத்தித் தகவல் மென்பொருள் என்பது குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தி தொடர்பான தகவல்களைப் பெற, பதிய, கணிக்கப் பயன்படும் மென்பொருள் ஆகும். உற்பத்திக்கு தேவையான பொருட்கள், உற்பத்தித் தரங்கள், உண்மையான உற்பத்தித் தரவுகள், அறிக்கைகள், அதிமுக்கிய செயற்திறன் குறிகாட்டிகள், கால ஓட்டத்தில் உற்பத்திப் போக்குகள் போன்ற தகவல்களை இந்த மென்பொருள் கொண்டிருக்கும். உற்பத்தி நடைபெறும் நிகழ்நேரத்தில் தரவுகள் சேமித்தல், கணக்கியல் விற்பனை மென்பொருட்களோடு ஊடாட்டம் போன்ற வசதிகளை சில உற்பத்தித் தகவல் மென்பொருட்கள் கொண்டுள்ளன.