உற்பத்தி வரி
ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டபின், அதன் விற்பனை மதிப்பில், ஒரு குறிப்பிட்ட விழுக்காடு உற்பத்தி வரியாக செலுத்தப்பட வேண்டும். பொருளை உற்பத்தி செய்பவர்கள், அதன் மதிப்பின் மீதான உற்பத்திவரியை அரசாங்கத்துக்கு செலுத்திவிட்டாலும் இந்த வரியை பொருளின் விலையுடன் சேர்த்து தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு விடுவார்கள். எனவே இது "மறைமுக வரி" எனப்படுகிறது.
தற்போது இந்தியாவில் பொதுவான உற்பத்தி வரி 10.3 % ஆக உள்ளது.
மூன்று நிபந்தனைகள்
தொகுஒரு பொருளின் மீது உற்பத்தி வரி விதிக்கப் படவேண்டுமெனில், மூன்று நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.