உலகப் புகழ்பெற்ற மூக்கு

உலகப் புகழ்பெற்ற மூக்கு என்பது வைக்கம் முகம்மது பஷீரால் எழுதப்பட்ட மலையாளச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஆகும். காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2008ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற மூக்கு
நூலாசிரியர்மலையாளம்: வைக்கம் முகம்மது பஷீர்
தமிழ்: குளச்சல் மு. யூசுப்
நாடுஇந்தியா
மொழிமலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை
வகைசிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்319
ISBN978-81-89945-55-8

மொழிபெயர்ப்பு

தொகு

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளை மு. யூசப் மலையாளத்தில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்த்துள்ளார்.

தொகுப்பிலுள்ள சிறுகதைகள்

தொகு
  • ஜென்ம தினம்[1]
  • ஐசுக்குட்டி [2]
  • அம்மா
  • புனிதரோமம்
  • மூடர்களின் சொர்க்கம்
  • பூவன்பழம்
  • நீலவெளிச்சம்
  • உலகப் புகழ்பெற்ற மூக்கு
  • தங்கம்
  • ஒரு பகவத் கீதையும் சில முலைகளுக்கும்
  • எட்டுக்காலி மம்மூஞ்ஞு
  • சிரிக்கும் மரப்பாச்சி
  • பூமியின் வாரிசுதாரர்கள்
  • சிங்கிடி முங்கன்
  • ஆனை முடி
  • பர்ர்ர் ...!

முன்னுரை மற்றும் பின்னுரை

தொகு

இச்சிறுகதைகளோடு மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையோடு மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் பஷீரைப் பற்றி எழுதிய '''எனது அன்பார்ந்த கதைசொல்லி''' என்ற நினைவுக்குறிப்பும், '''பஷீர் எனும் தனிமரம்''' என்ற பின்னுரை எம். என். விஜயனாலும் எழுதப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. அழியாச் சுடர்கள் தளத்தில் 'ஜென்ம தினம்' சிறுகதை
  2. "சிறுகதைகள் தளத்தில் 'ஐசுக்குட்டி' சிறுகதை". Archived from the original on 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் 2015-01-29.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகப்_புகழ்பெற்ற_மூக்கு&oldid=3545283" இலிருந்து மீள்விக்கப்பட்டது