உலகப் புற்றுநோய் நாள்
உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[1] புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,[2] நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதும் இந்நாள் அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கங்களாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. புற்றுநோய் இறப்பு வீதத்தையும் புற்றுநோய்த் தாக்கத்தையும் 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.[3].
உலகப் புற்றுநோய் நாள் World Cancer Day | |
---|---|
உலகப் புற்றுநோய் நாள் 2017 | |
பிற பெயர்(கள்) | உபுநா |
கடைபிடிப்போர் | அமெரிக்க உறுப்பினர்கள் |
அனுசரிப்புகள் | புற்றுநோய் விழிப்புணர்வும், தடுத்தலை ஊக்குவித்தல் |
தொடக்கம் | 4 பிப்ரவரி |
முடிவு | 5 பிப்ரவரி |
நாள் | 4 பிப்ரவரி |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தொடர்புடையன | புற்று நோய் |
உலக புற்றுநோய் நாள் தவறான தகவல்களை குறிவைத்து செயற்படுகிறது.[4] விழிப்புணர்வை எழுப்புகிறது மற்றும் களங்கத்தை குறைக்கிறது.[5] புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல முயற்சிகள் உலக புற்றுநோய் நாளில் நடத்தப்படுகின்றன. இந்த இயக்கங்களில் ஒன்று மொட்டைத்தாமி என்ற இயக்கமாகும். புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு தைரியத்தின் அடையாளத்தைக் காட்டுவதற்காக "சிகையலங்காரம் செய்பவர்கள்" உலகளாவிய அளவில் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்கின்றனர்.[6] இயக்கத்தில் பங்கேற்பாளர்களின் படங்கள் பின்னர் சமூக ஊடகங்கள் முழுவதும் பகிரப்படுகின்றன. இதைப்போன்ற இயக்கங்கள் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்காக நடைபெறுகின்றன.[7]
வரலாறு
தொகுஉலகப் புற்றுநோய் நாள் 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள் அன்று பாரிசில் நடைபெற்ற புதிய நுற்றாண்டில் புற்றுநோய்க்கு எதிரான உலக புற்றுநோய் உச்சி மாநாட்டில் நிறுவப்பட்டது.[8] புற்றுநோய் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும், புற்றுநோயைத் தடுப்பதற்கும், நோயாளிகளின் சேவைகளை மேம்படுத்துவதற்கும் பாரிசு சாசனம் உருவாக்கப்பட்டது.[9] உலக புற்றுநோய் நாள் அனுசரிப்பு அதிகாரப்பூர்வ கையொப்பமும் இச்சாசனத்தில் இடம்பெற்றது. யுனெசுகோவின் அப்போதைய பொது இயக்குநர் உச்சிமாநாட்டில் கையெழுத்திட்டார்.[10]
உலகப் புற்றுநோய் நாள் கருப்பொருள்கள்
தொகு2019-2021 ஆம் ஆண்டில் 'நான் இருக்கிறேன் என்னால் முடியும்' என்ற கருப்பொருள் அனுசரிக்கப்பட்டது. புற்றுநோயைப் பற்றிய எதிர்மறையான அணுகுமுறையையும், புற்றுநோயை எதுவும் செய்ய முடியாது என்ற கொடிய நம்பிக்கையையும் இக்கருப்பொருள் எதிர்க்க முயல்கிறது . தனிப்பட்ட செயல்கள் எவ்வாறு சக்தி வாய்ந்ததாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்பதையும் இது ஊக்குவிக்கிறது.[11]
2016 ஆம் ஆண்டில், உலக புற்றுநோய் நாளில் 'நம்மால் முடியும், என்னாலும் முடியும்' என்ற கருப்பொருளின் கீழ் மூன்று ஆண்டு பிரச்சாரம் தொடங்கியது. புற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கான கூட்டு மற்றும் தனிப்பட்ட செயல்களின் ஆற்றலை இக்கருப்பொருள் ஆராய்ந்தது. 2016 ஆம் ஆண்டுக்கு முன் "எங்களுக்கு அப்பால் ஏதுமில்லை" (2015) மற்றும் "புனைவுகளை அகற்று" (2014) போன்றவை பிரச்சாரக் கருப்பொருள்களாக இருந்தன..
ஆண்டு | கருப்பொருள் |
---|---|
2019 - 2021 | 'நான் இருக்கிறேன் என்னால் முடியும்.'[11] |
2016 - 2018 | 'நம்மால் முடியும், என்னாலும் முடியும்.'[12] |
2015 | எங்களுக்கு அப்பால் ஏதுமில்லை[13] |
2014 | புனைவுகளை அகற்று[14] |
2013 | புற்றுநோய் கட்டுக்கதைகள் - உண்மைகளைப் பெறுங்கள் [15] |
2012 | ஒன்றாக ஏதாவது செய்வோம்[16] |
2010 - 2011 | புற்றுநோயை வராமல் தடுக்கலாம்[17] |
2009 - 2010 | 'ஆரோக்கியமான சுறுசுறுப்பான குழந்தைப் பருவத்தை நான் விரும்புகிறேன்'[18] |
விளைவுகள்
தொகுஉலகப் புற்றுநோய் நாள் பன்னாட்டு புற்றுநோய் சமூகம், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்களால் அனுசரிக்கப்படுகிறது.[19] ஒவ்வோர் ஆண்டும், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயல்பாடுகள் நடைபெறுகின்றன. அன்றைய தினமே சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக பதிவேற்றப்படுகின்றன.[20]
சமீபத்திய ஆண்டுகளில், ஆரஞ்சு மற்றும் நீல நிறங்களில் முக்கியமான அடையாளங்களை ஒளிரச் செய்வதன் மூலம் பல்வேறு நகரங்கள் இந்நாளை ஆதரிக்கத் தொடங்கியுள்ளன. 2019 ஆம் ஆண்டில், 37 நகரங்களில் உள்ள 55 அடையாளங்கள் இம்முயற்சியில் பங்கேற்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "உலகப் புற்றுநோய் நாள் பிப்.4: புற்றுநோய் எந்த வயதில் கவனம் தேவை?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
- ↑ "எல்லா புற்றுநோய்களுக்கும் ஒரே தீர்வு - வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு". BBC News தமிழ். 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
- ↑ "World Cancer Day 2013 One-Pager (English)". UICC. Archived from the original on 2 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Szabo, Liz (3 February 2013). "World Cancer Day targets myths, spreads message". USA Today. http://usatoday30.usatoday.com/LIFE/usaedition/2013-02-04-World-Cancer-Day-aims-to-dispel-stereotypes_ST_U.htm.
- ↑ Gander, Kashmira (4 February 2016). "World Cancer Day: Why is the disease still a taboo?". The Independent. https://www.independent.co.uk/life-style/health-and-families/features/world-cancer-day-why-is-the-disease-still-a-taboo-a6853126.html.
- ↑ Wheeler, Brad (27 January 2016). "Three international productions, including Scotland's The James Plays, to headline Luminato 2016". The Globe and Mail. https://www.theglobeandmail.com/arts/theatre-and-performance/three-international-productions-including-scotlands-the-james-plays-to-headline-luminato-2016/article28412339/.
- ↑ "WCD | We Can. I Can". www.worldcancerday.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
- ↑ "World Cancer day 2021: Cancer can be Cured by True Worship". S A NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). 4 February 2021. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
- ↑ https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000119111
- ↑ "World Cancer Day: Why the Fourth of February?". ASCO Connection. 19 March 2012.
- ↑ 11.0 11.1 "Campaign theme (I am and I will) | World Cancer Day". www.worldcancerday.org.
- ↑ "World Cancer Day 2018: Theme, goals and significance". The Indian Express (in ஆங்கிலம்). 4 February 2018. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
- ↑ "World Cancer Day 2015: 'Not Beyond Us' Campaign launched! | UICC". www.uicc.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
- ↑ "World Cancer Day 2014: Debunk the myths! | UICC". www.uicc.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
- ↑ "» Cancer Myths – Get the Facts on World Cancer Day – 4 Feb 2013 | CANSA – The Cancer Association of South Africa". www.cansa.org.za (in ஆங்கிலம்). 22 January 2013. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
- ↑ "World Cancer Day: "Stand Up To Cancer!" and End Mesothelioma and other Asbestos-Caused Cancers - ADAO - Asbestos Disease Awareness Organization". www.asbestosdiseaseawareness.org (in அமெரிக்க ஆங்கிலம்). 4 February 2012. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
- ↑ "World Cancer Day 2010". Healthcare-in-Europe.com. 3 February 2010.
- ↑ "World Cancer Day 2009". 4 February 2020.
- ↑ "World Cancer Day | Description, Facts, & History". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
- ↑ "StackPath" (PDF).