உலகளாவிய காற்று ஆற்றல் சபை

உலகளாவிய காற்று ஆற்றல் சபை (Global Wind Energy Council) 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, ஒட்டுமொத்த காற்று ஆற்றல் துறைக்கும் சர்வதேச அளவில் ஒரு நம்பகமான பிரதிநிதி மன்றமாக இச்சபை இயங்குகிறது. உலகின் முன்னணி எரிசக்தி ஆதாரங்களில் ஒன்றாக காற்று ஆற்றலை மாற்றுவதும், கணிசமான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகள் வழங்கும் வகையில் காற்று சக்தியை உறுதிப்படுத்துவதும் இச்சபையின் நோக்கமாகும் [1].

தற்காலிக விநியோக தொடர் இடர்பாடுகள் இருந்த போதிலும், சர்வதேச காற்றுச் சந்தைகள் தங்கள் வலுவான வளர்ச்சியைத் தொடர்கின்றன என்று உலகளாவிய காற்று ஆற்றல் சபை வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. நிறுவப்பட்ட காற்று ஆலை உற்பத்தித் திறன் 2006 ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் 25% அதிகரித்தது, 18 பில்லியன் யூரோ (23 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள புதிய சாதனங்களை உருவாக்கப்பட்டன. 74 கிகாவாட் மதிப்புள்ள ஆற்றல் காற்று ஆலைகள் மூலம் உருவாக்கப்பட்டது. 48 கிகாவாட் அளவுக்கு திறன் கொண்ட காற்று ஆலை ஆற்றல் உற்பத்தி செய்து ஐரோப்பிய ஒன்றியம் முன்னணி சந்தையாக விளங்கினாலும், வட அமெரிக்கா மற்றும் ஆசியா போன்ற பிற கண்டங்கள் விரைவாக இத்துறையில் வளர்ந்து வருகின்றன.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு